புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கவலைக்கிடமான நிலையில் கைலாசநாதர் நித்யானந்தா.. சொத்துக்களை அடைகாக்கும் ஒரே சிஷ்யை

பெண்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களால் மிகவும் பிரபலமானவர் நித்யானந்தா. இந்நிலையில் தற்போது கைலாசம் என்ற தீவு நாட்டை விலைக்கு வாங்கி அங்கேயே நித்யானந்தா குடியிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அடிக்கடி இணைய வாயிலாக தனது ரசிகர்களிடம் உரையாடி வருகிறார் நித்யானந்தா. இவ்வாறு இருக்கையில் சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, தற்போது பேசும் திறன் இல்லை, சொற்பொழிவு ஆற்ற சில காலம் ஆகும் என நித்யானந்தா பதிவிட்டிருந்தார்.

மேலும் 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரஞ்சிதா நித்யானந்தாவின் சீடர் ஆவார். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு ஜெய்ஹிந்த், அமைதிப்படை, சின்ன வாத்தியார், பெரியமருது, பொம்மலாட்டம் உள்ளிட்ட படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியான ராவணன் படத்திலும் ரஞ்சிதா நடித்து இருந்தார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா வீடியோ இணையத்தில் வெளியானது.

அப்போது இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தற்போதும் கைலாசத்தில் இருக்கும் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக நித்யானந்தாவின் உடல்நிலையில் பிரச்சினை உள்ளதால் அவரை கவனித்து வருகிறார் என கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க நித்யானந்தாவின் சொத்துக்களை அபகரிக்க தான் ரஞ்சிதா இவ்வாறு திட்டமிட்டுள்ளார் என நித்தியானந்தாவின் சீடர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நித்யானந்தாவின் கலந்துரையாடல்கள் வெளியாகாமல் உள்ளதால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News