வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

எனக்குதான் உதவல, நீயே வச்சுக்க.. பாக்யா எடுத்த விபரீத முடிவு!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில தினங்களாகவே ரசிகர்களை என்னவெல்லாம் நடக்க நினைத்தார்களோ அதெல்லாம் சீரியலில் அரங்கேறிக் கொண்டு இருப்பதால் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சின்னத்திரை ரசிகர்களின் விருப்பமான சீரியலாக மாறிவிட்டது.

ஏனென்றால் கோபியின் குடும்பத்தை பார்த்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்று ராதிகாவை சமாளிக்க முடியாமல் திணறிய கோபி, குடித்துவிட்டு பாக்யா தான் தன்னுடைய மனைவி என்பதை ராதிகாவிடம் உளறிக் கொட்டி விட்டான். இதைக்கேட்ட ராதிகா கோபியின் மீது கடுப்பாகி அவனை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை அடைகிறாள்.

இதன் பிறகு வீட்டிற்கு சென்ற கோபி, பாக்யாவிடமும் குடிபோதையில், ’25 வருடங்களாக கடமைக்கே உன்னுடன் வாழ்கிறேன்’ என்று அவளை வெறுத்து ஒதுக்கி பேசுகிறான். அதுமட்டுமின்றி கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பது ஊர்ஜிதம் ஆகும் அளவுக்கு உளறிக் கொட்டி விட்டான்.

இதன்பிறகு மனவருத்தம் அடைந்த பாக்யா, ராதிகா வீட்டிற்கு செல்கிறாள். அங்கு ராதிகா முதல் முதலாக பாக்யாவை கோபியின் மனைவியாக பார்ப்பதால் இவ்வளவு நாள் பாக்யாவிற்கு துரோகம் செய்து விட்டேனே என கலங்குகிறாள். அதன்பிறகு ராதிகா, ‘தான் திருமணம் செய்துகொள்ளும் இரண்டாவது நபரும் தவறாதவர் போல் தெரிகிறது. அவர் வாயாலேயே பல உண்மைகளை கூறியதால் அவருடன் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை’ என கண்கலங்கி பேசுகிறாள்.

இதையெல்லாம் கேட்ட பாக்யா, ‘அவர் வாயாலே உன்னையெல்லாம் சொன்னதால் அவர் நல்லவளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்’ என கோபியை நல்லவன் போல் ராதிகா நம்பும் அளவுக்கு பேசியிருந்தாள். பாக்யாவின் இந்தப் பேச்சு கோபியை மனதில் வைத்து தான் வெளிப்படுகிறது என்றாலும் கோபி தான் ராதிகா செல்லும் நபர் என தெரியாமல் கோபிக்கு சாதகமாகவே பாக்யா தன்னுடைய கணவரை ராதிகாவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார்.

விருப்பமில்லாமல் 25 வருடங்களாக சேர்ந்த வாழ்வதை விட விரும்பியவர்கள் உடன் சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என பாக்யா இந்த விசயத்தில் ராதிகாவிற்கு கோபியை விட்டுக் கொடுக்கும் துணிச்சலான முடிவை இனி வரும் நாட்களில் நிச்சயம் எடுப்பாள்.

Trending News