எங்க போனாலும் அவமான படுத்துறாங்க.. மேடையில் புழம்பித் தவித்த பிக் பாஸ் நடிகை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எந்த அளவுக்கு பிரபலமாகிறார்களோ அதே அளவுக்கு சர்ச்சையிலும் சிக்குகின்றனர். அவ்வாறு சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் நடிகை தனது மனக்குமுறலை கல்லூரி விழாவில் கொட்டி தீர்த்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் ஜூலி. இவர் கோஷமிட்ட வசனங்களால் மக்கள் இவரை கொண்டாடினார்கள். இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீசனில் கலந்து கொண்ட இவருக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவ்வப்போது தன் புகைப்படத்தை வெளியிட்டவர். ஆனாலும் ஜூலியை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். மேலும் ஜூலிக்கு ஒரு சில சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

பிக்பாஸில் கேடுத்துக்கொண்ட பெயரை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்ற வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். ஆனாலும் அப்போதும் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் சமீபத்தில் தனது காதலர் ஏமாற்றி விட்டதாக ஒரு பதிவை போட்ட சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜூலி பங்கேற்றார். அதில் பேசிய ஜூலி, ஜல்லிக்கட்டை பற்றி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். இந்நிலையில் மாணவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஜூலியிடம் கேள்விகள் கேட்டனர்.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. எனக்கு புல் நெகட்டிவ் சென்ஸ், இதைப்பற்றி நான் ஓப்பனாகவே சொல்வேன். இதேபோல் காலேஜ் நிகழ்ச்சியிலும் நான் அவமானப்பட்டு இருக்கிறேன். யாருக்கும் என்னை பிடிக்காது என மனவருத்தத்துடன் ஜூலி பேசியது பலரையும் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் இவ்வளவு ட்ரோல் செய்தும் ஜூலி தன்னம்பிக்கையுடன் தற்போதும் தனது வேலையில் கவனம் செலுத்தி வருவது பலரும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.