தமிழ் சினிமாவின் சுள்ளானாக இருந்த நடிகர் தனுஷ், தன்னுடைய அசுர வளர்ச்சியினால் பாலிவுட், ஹாலிவுட் என முன்னேறி செல்கிறார். இந்நிலையில் தனுஷ் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் ‘சார்’ என்கின்ற டைட்டிலுடன் ரிலீஸாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து தனுஷ் சேகர் கம்முலா படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் ஆறு மாதத்திற்கு முன்பு வெளியாகி, அந்தப் படத்தை குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை. அத்துடன் தமிழில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு சமீபகாலமாக படங்கள் ஓடாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும், இந்த ஆண்டு மார்ச் மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாறன்’ திரைப்படமும் வசூல் ரீதியாக பெரும் அடிவாங்கி ரசிகர்களின் ஆதரவை தராத படமாக இவருக்கு பெரும் சரிவை தந்தது.
இப்படி படங்கள் ஓடாத காலத்தில் கஷ்டப்பட்ட ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு சொந்தப் படத்தை எடுத்து தயாரித்தார். அந்தப் படம் அவருக்கு சினிமாவில் அவர் பெயரை தக்க வைத்துக் கொள்ளும்படி அமைந்தது. அதன் மூலம் அவர் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை வெற்றியுடன் ஆரம்பித்தார்.
அதேபோல்தான் ஆர்யாவும் படங்கள் ஓடாமல் இருந்தபோது தானே நடித்து இயக்கி, கடந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து சினிமாவில் தன்னுடைய இருப்பை காப்பாற்றிக் கொண்டார். இதேபோல் தனுஷ் ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து வெற்றி காண வேண்டும்.
அப்பொழுது தான் அவரை காப்பாற்றி கொள்ள முடியும். இப்படிப்பட்ட நிர்பந்தத்தில் இருக்கும் தனுஷ் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்தமான கதை அம்சத்தை கொண்ட படத்தை தயாரித்து அதில் நடித்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவரால் முன்பு போல் காலூன்றி நிற்க முடியும் .