பிரபல விஜய் டிவியின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ராமர். இவர் தற்போது, பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், இவர் செய்து வரும் வேலையை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில், அது இது எது, சகல விசஸ் ரகள, ராமர் வீடு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல காமெடி நிகழ்ச்சிகளில் நகைச்சுவையோடு நடித்து மக்களை தன்வசம்படுத்தியவர் ராமர். மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர் திருமணமாகி 3 குழந்தைகளோடு அரிட்டாபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே, சமீபத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கொட்டாம்பட்டி ஊராட்சியில் ஆய்வில் ஈடுபட்டார். இதனையடுத்து, வெங்கடேசன் சின்னத்திரை கலைஞர் ராமருடன் புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் 18 சுக்காம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக உள்ள சின்னத்திரை கலைஞர் விஜய் டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் ராமர், விஏஓ ஆபீஸர் என்பது தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஒரு விஏஓ ஆபீசராக இருந்துக்கொண்டு தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்தும், விஜய் டிவியில் அழைப்பு விடுக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வரும் ராமரைப் பார்த்து அனைவரும் வியந்து உள்ளனர்.
தற்போது இந்த செய்தி வெளியானதை அடுத்து ராமரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.மேலும் ராமரின் புகழ் இதன் மூலமாக இன்னும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.