திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கைத்தட்டலை தாண்டி கண்ணீரை வர வழைத்த பாக்யராஜின் 5 படங்கள்.. மறக்க முடியாத அந்த 7 நாட்கள்!

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த கே பாக்யராஜ் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதன் பிறகு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமின்றி கதாநாயகனாகவும் அறிமுகமானார். பிறகு இயக்குனராக சுவரில்லாத சித்திரங்கள் படத்தை இயக்கி ஒரு இயக்குனராக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். இவருடைய படங்களில் செண்டிமெண்ட்டிருக்கு பஞ்சமில்லாமல் அந்தக் காலத்து நடைமுறையில் ரசிகர்களிடம் கை தட்டுகள் மட்டுமின்றி கண்ணீரையும் வர வரவைக்கும்.

தாவணிக் கனவுகள்: 1984 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்த தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் இவருடன் சிவாஜி கணேசன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.  5 தங்கைகளின் திருமணத்தை நடத்தவேண்டிய, அண்ணன் பொறுப்பைத் தலையில் தூக்கி சுமந்து கொண்டு படாத பாடுபடும் பாக்கியராஜ் இயல்பான நடிப்பு இந்தப் படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அந்தப் படத்திற்கு உள்ளே செல்ல வைத்திருக்கும்

முந்தானை முடிச்சு: 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில், முதல் மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் இருக்கும் பாக்கியராஜ் இரண்டாவது திருமணம் ஊர்வசியை செய்து கொள்ள விரும்பாமல் ஒருகட்டத்தில் திருமணம் நடந்த பிறகு குழந்தைக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்யத் துணிந்த தந்தை படும்பாட்டை பாக்கியராஜ் உள்ள படத்தில் அழகாக சித்தரித்து கண்டித் திருப்பார். இதில் முருங்கைக்காய் சமாச்சாரத்தையும் பற்றிப் பேசி பிரபலமானார்.

ஒரு கை ஓசை: 1980ல் பாக்யராஜ் இயக்கி நடித்த இந்தப் படத்தில் ஊமை வேடத்தில் கதாநாயகனாக பாக்கியராஜ் நடித்திருப்பார். கணவனை விட்டு பிரிந்து தனித்து வாழும் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடிவெடுத்த பாக்யராஜ் மணமேடை ஏறும் போது அவளுடைய கணவன் வந்துவிட முதல் வாழ்க்கைதான் சரியானது என அவனுக்கு விட்டுக்கொடுத்து ஒதுங்கி விடுவான். இந்தப் படத்தில் பாக்யராஜ் நடிப்பு மனதை வருடும் வகையில் இருந்ததால் இந்தப் படம் திரையரங்கில் ரசிகர்களைக் கண்ணீர் வடிக்க வைத்தது.

சுவரில்லாத சித்திரங்கள்: கடந்த 1979 ஆம் ஆண்டு பாக்யராஜ் முதல் முதலாக இயக்குனராக அறிமுகமான சுவரில்லாத சித்திரம் திரைப்படத்தில் பாக்யராஜ், சுதாகர், சுமதி 3 பேரின் முக்கோணக் காதலை வெளிப்படுத்தியிருக்கும். வசதி படைத்த காதலனாக இருக்கும் பாக்யராஜ், ஒருதலை காதலாக சுமதியை காதலிக்க, சுமதி சுதாகரை காதலிக்க, மனமுடைந்த பாக்யராஜ் சுமதியின் சுதாகருக்கு விட்டுக்கொடுத்து விலகி விடுகிறான். கடைசியில் சுதாகர்-சுமதி இருவரும் சேர்ந்து வாழாமல் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்தப்படத்தில் காதலியை இழந்த பாக்யராஜ் தவிக்கும் தவிப்பு ரசிகர்களை உருக வைத்திருக்கும்.

அந்த 7 நாட்கள்: 1981 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த இந்தப் படத்தில் பாக்கியராஜ் உடன் அம்பிகா, ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மலையாளியான பாக்யராஜ், அம்பிகா வீட்டிற்கு வாடகைக்கு தங்கி இருக்கும் போது அவர்கள் இருவருக்கும் காதல் மலர, அதன் பிறகு அம்பிகா-ராஜேஷ் இருவருக்கும் எதிர்பாராதவிதமாக திருமணம் நடந்து போக, தன்னுடைய மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்கும் நோக்கத்தில் கணவர், பாக்யராஜை வீட்டிற்கு அழைத்து வரும்போது, ‘என்னுடைய காதலி உங்கள் மனைவி ஆகலாம். ஆனால் உங்கள் மனைவி என்னுடைய காதலியாக முடியாது’ என்று கூறி தன்னுடைய காதலியை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவான். இப்படி காதலர்கள் பிரிந்து பாடுவதை தத்துரூபமாக காண்பித்து பாக்யராஜ் இந்தப்படத்தை பார்ப்போரை கண் கலங்க வைத்திருப்பார்.

இப்படி சென்டிமென்ட் படங்களில் உருக்கமான வசனங்களை வைத்து ரசிகர்களை கவர்ந்த பாக்கியராஜ், தன்னுடைய இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்று கை தட்டுகளை வாங்கியது மட்டுமல்லாமல் அவர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு கண்ணீர் வடிக்க வைத்திருப்பார்.

Trending News