தனத்தை வார்த்தையால் குத்திக் கிழிக்கும் சொந்தம்.. செருப்படி பதில் கொடுத்த ஐஸ்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இயற்கையாக கருத்தரிக்க முடியாத முல்லைக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க செய்வதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் 5 லட்சம் ரூபாயை வட்டிக்கு கடன் வாங்கி அந்த சிகிச்சையை மேற்கொண்டனர். கடைசியில் அந்த சிகிச்சை பலனளிக்காமல் முல்லை கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு முன்பு வந்து, கடனைத் திருப்பித் தரும்படி கேட்டதால் ஜீவா, மீனாவிடம் இருந்த பணத்தை கோபி கடன்காரர்களிடம் கொடுத்து வாயை அடைகிறான். இந்த விஷயம் மீனாவின் அப்பா அம்மாவிற்கு தெரியவர முல்லையின் மருத்துவ செலவிற்கு என்னுடைய மகள் ஏன் பணம் தரவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

உடனே தனம் தன்னுடைய கையில் இருக்கும் வளையலை கழட்டி இதை அடகு வைத்துவிட்டு அந்த பணத்தை மீனாவிடம் கொடுத்துவிடுடா ஜீவா என சொல்ல, இதைக்கேட்ட மீனாவின் அம்மா மருமகனை மரியாதை இல்லாமல் சபையில் பேசாதீர்கள் என தனத்தை திட்டுகிறார். பணம் இருப்பதால் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாயா என தன் அத்தை முல்லையின் அம்மா தேவையில்லாமல் திட்டுகிறார்.

குடும்பமே சேர்ந்து தனத்தை திட்டினாலும் அதன்பிறகு தனம் கண்ணனை அழைத்து, அவனை வாடா போடா என சொல்லிக் கொள்ளலாமா என ஐஸ்வர்யாவிடம் அனுமதி கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா வீட்டிற்கு புதிதாக வந்தவர்கள் ஏதோ சொல்கிறார்கள் என நானும் அவர்களைப்போல் பேசுவதற்கு பைத்தியமா பிடிச்சிருக்கு என தனத்தை திட்டிய சொந்த பந்தத்திற்கு செருப்படி பதில் கொடுக்கும் வகையில் நாசுக்கான வார்த்தையால் குத்தி கிழிக்கிறாள்.

இதன்பிறகு மீனா, ஐஸ்வர்யா தங்களை தான் மறைமுகமாக திட்டுகிறாள் என புரிந்தது கொண்டு, ஐஸ்வர்யாவிடம் சண்டைக்கு கிளம்புகிறாள். அந்த சமயத்தில்  ஐஸ்வர்யா மற்றும் மீனா இருவரும் சண்டை போடுவதை தனம் தடுத்து நிறுத்துகிறார். மூத்த மருமகளாக இருப்பதால் எந்த பிரச்சனை வராமல் பார்க்க நினைக்கும் தனம் வீட்டிற்கு வந்திருக்கும் சொந்த பந்தத்தில் அவமானப் படுத்தப் படுகிறாள்.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தனம் பிறந்தநாள் கொண்டாட்டம் விழாவில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சந்தோசமாக இருப்பார்கள் என நினைத்தால் பணப்பிரச்சினை தலைதூக்கி நின்று, குடும்பத்திற்குள் காரசாரமான விவாதம் அரங்கேறி சீரியலை மேலும் விருவிருப்பாக்கி உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →