அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இதே கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் லுக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் அஜித் மங்காத்தா படத்திற்கு பிறகு இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி இணையத்தில் வெளியானது. மேலும் இப்படம் ஒரு வங்கி கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம். இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 9 ஏக்கர் ஏகே61 படத்திற்காக படப்பிடிப்புக்காக அந்த செட் போடப்பட்டுள்ளதாம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியாரும், வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கொக்கன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. சமீபத்தில் தயாநிதி அழகிரி அஜித் மற்றும் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.
தற்போது அஜித் மாஸ் லுக் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கண்ணாடி, காதில் கடுக்கன் என ஒரு மாஸ் லுக்குடன் அஜித் போஸ் கொடுத்துள்ளார். தற்போது உடம்பை வெகுவாக குறைத்து ஹாலிவுட் ஹீரோக்களை ஓரம் கட்டும் அளவிற்கு அஜித் மாறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது இணையத்தில் இதை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் தற்போது அஜித்தின் இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரண்டாகி ஆகியுள்ளது. மேலும் இதே தோற்றத்துடன் தான் ஏகே 61 படத்தில் அஜித் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.