வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அழகு மட்டுமல்ல நடிப்பிலும் நான் குயின்.. ஐஸ்வர்யா ராய் தன்னை நிரூபித்த 5 படங்கள்!

1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாராய், அதற்குப் பிறகு ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிகளில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். 90-களில் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான படங்களில் மெழுகு சிலை போல இருக்கும் ஐஸ்வர்யாவை திரையில் பார்ப்பதற்காகவே எக்கச்சக்கமான கூட்டம் இருந்தது.

இருவர்: ஐஸ்வர்யா ராய் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு 1994-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் தெளிவான இருவர் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். முதல் படம் எனத் தெரியாத அளவுக்கு ஐஸ்வர்யாராய் இந்தப்படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். இந்தப்படத்தில் ஐஸ்வர்யாவின் அழகைக் கண்டு வியப்படையாதோர் எவரும் இலர். இந்த படத்தில் அழகு மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஐஸ்வர்யா ராய் குயினாக தெரிவார்.

குரு: 2007 ஆம் ஆண்டு இந்தி, தமிழ், தெலுங்குகளில் திரையிடப்பட்ட குரு திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவரான அபிஷேக் பச்சன் உடன் ஜோடி சேர்ந்து நடித்து இருப்பார். இந்தப் படத்தையும் மணிரத்னம் தான் இயக்கி இருப்பார். இதில் ஐஸ்வர்யா, சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் சாதாரண குடும்பப் பெண் போல் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளி காட்டியிருப்பார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: 2000 ஆம் ஆண்டு ராஜீவ்மோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லால் அவர்களுக்கு ஜோடி சேர்ந்திருப்பார். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா-அப்பாஸ் இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பார்கள்.

அதன்பிறகு அப்பாஸ் பணக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து விட்டு, ஐஸ்வர்யாவின் காதலை அவமதித்த போது, அதை திறம்பட கையாண்டு பாடகியாக முன்னேறி, ‘தான் காதலிப்பவரை விட, தன்னை காதலிப்பவரை ஏற்று கொள்ள வேண்டும்’ என மம்முட்டியுடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கும் ஐஸ்வர்யாவின் நடிப்பு இந்தப்படத்தில் ரசிகர்களின் கைத்தட்டுகளுக்கு சொந்தமானது.

ஜீன்ஸ்: 1998 ஆம் ஆண்டு ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்கள் அதிலும் ஐஸ்வர்யாவின் நடிப்பு படத்தைப் பார்த்த ரசிகர்களை படத்துடன் ஒன்றிக்க வைத்திருக்கும். இதில் காதல், அழுகை, வெறுப்பு என அனைத்தையும் ஐஸ்வர்யா தம்முடைய அழகான நடிப்பால் வெளிக்காட்டி இருப்பார்.

 ராவணன்: 2010ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விக்ரமால் கடத்திவரப்பட்ட சிறை பிடிக்கப்பட்ட ஐஸ்வர்யா, கடைசியில் தன்னுடைய கணவர் பிரித்விராஜ் விக்ரமை சுட்டு விடக்கூடாது என விக்ரமின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் படும் பாடு கிளைமாக்சை பார்த்த ரசிகர்களை கண் கலங்க வைக்கும்.

இவ்வாறு ஐஸ்வர்யா ராய் அழகின் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் சிறந்தவர் என்பதற்காகவே அழகிற்கு உலக அழகி என்ற பட்டம் கொடுத்தது போல் நடித்திருக்கும் உலக நடிகை என்று பட்டம் கொடுத்தால் அதுதகும். அந்த அளவிற்கு தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களை வசியம் செய்த கெட்டிக்காரர். இவருடைய படங்கள் இன்றும் தொலைக்காட்சியில் போட்டால் அதைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் தவற மாட்டார்கள்.

Trending News