வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

நிரந்தரமாக வீட்டை விட்டு பிரியும் கதிர், முல்லை.. உடையும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் முல்லையின் சிகிச்சைக்காக மூர்த்தி வெளியில் இருந்த 5 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் வட்டிக்கு பணம் கொடுத்தவர் வீட்டுக்கு முன் வந்து விட்டார்.

இதனால் ஜீவா மீனாவிடம் இருந்த பணத்தை வாங்கி கடனைக் கொடுத்துவிட்டார். இந்த விஷயம் மீனாவின் அப்பாவிற்கு தெரிந்துவிட்டது. இதனால் எல்லோர் முன்னாடியும் கதிரை அவமானப்படுத்துகிறார். இதனால் வீட்டில் பெரிய பூகம்பமே வெடிக்கிறது. தன் மகள் மற்றும் மருமகனுக்கு சப்போர்ட்டாக முலையில் அம்மா, அப்பா பேசுகிறார்கள்.

வாக்குவாதம் முற்றி போகும்போது உடனே தனம் தன்னுடைய வளையலை அடகு வைத்து மீனாவிடம் பணத்தை கொடுக்குமாறு கண்ணனிடம் கூறுகிறார். அப்போது தனத்தின் அம்மா, அண்ணன் இருவரும் வளையலை அடமானம் வைக்க முட்டுக்கட்டையாக உள்ளனர்.

இவ்வாறு தொடர்ந்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கதிர் எல்லோரும் நிறுத்துங்கள் என கூறுகிறார். இந்த பணத்தை கண்டிப்பா நான் கொடுத்துடறேன், ஆனா அதுக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என கதிர் கேட்கிறார்.

இதைத் தொடர்ந்து நாங்கள் இந்த வீட்டை விட்டுப் போகிறோம் என கதிர் கூறுவதைக் கேட்டு மூர்த்தி உடைந்து போகிறார். நீ இந்த வீட்டை விட்டுப் போனா நாங்க இனிமே உன்னோட பேசவே மாட்டோம் என அழுதபடி கூறுகிறார். ஆனால் அதையும் மீறி முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

உடனே பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமுமே அழுது கொண்டே அவர்கள் பின்னால் செல்கிறது. மீனா அப்பா இத்தனை நாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை உடைக்க வேண்டும் என்று நினைத்தது தற்போது நடந்துள்ளது. இவ்வாறு பல அதிரடி திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வர இருக்கிறது.

Trending News