திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

படுக்கைக்கு வந்தால் மட்டுமே படவாய்ப்பு.. உச்சத்தில் இருந்தும் சினிமாவை தூக்கி எறிந்த நடிகை

திரையுலகில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் பாலியல் தொல்லைகள் தற்போது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த டார்ச்சர் தாங்காமல் சிலர் விரக்தியான மன நிலைக்கு சென்று விடுகின்றனர். அப்படி ஒரு மன உளைச்சலில் தான் அந்த நாயகியும் இருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் அந்த வெள்ளாவி நடிகை. அவரின் சுருள் முடியும், பால் நிறமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் அவர் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

தற்போது அவர் ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் தனக்கு வரும் சினிமா வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்று உதறி வருகிறாராம். அதற்கு பதில் படங்களை தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்த அவர் முடிவெடுத்துள்ளாராம்.

பல பட வாய்ப்புகள் தேடி வரும் சமயத்தில் அதை ஏன் மறுக்க வேண்டும் என்று கேட்டால், நடிகை விரக்தி அடைந்த நிலையில் ஒரு பதிலை கூறுகிறாராம். அதாவது நடிகை எங்கு சென்றாலும் பலரும் திறமையை பார்க்காமல் படுக்கைக்கு அழைப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்களாம்.

இதில் சில முன்னணி பிரபலங்களும் இருப்பதுதான் நடிகையை வேதனை அடைய வைத்துள்ளது. இதனால் வெறுத்துப்போன நடிகை தற்போது சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார். தற்போது பட வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்து வரும் நடிகையை பற்றி தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News