புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விடுதலை படத்தில் இருந்து விடுதலையான சூரி.. விஷ்ணு விஷாலுக்கு போட்டியாக எடுக்கப்போகும் புது அவதாரம்!

விடுதலை திரைப்படத்தில் சூரியின் காட்சிகள் முடிவு பெற்ற நிலையில், தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தானே தயாரிக்க உள்ளதாக சூரி முடிவெடுத்துள்ளார்.

சூரி, தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹீரோவாக அறிமுகவுள்ள இத்திரைப்படம் கிட்டத்தட்ட 3 வருடங்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது சூரியின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

மேலும் விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கான படப்பிடிப்பு காட்சியினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த மூன்று வருடத்தில் மட்டும் சூரி 10 கோடிக்கும் மேல் தன வருமானத்தை இழந்துள்ளார்.

அந்த அளவுக்கு இத்திரைப்படத்தில் உடலை மெருகேற்றி, நடித்து வேறு எந்த திரைப்படத்திலும் சரிவர கால்ஷீட் கொடுத்து நடிக்க முடியாத அளவுக்கு விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார் சூரி. இதனிடையே தற்போது தனது தந்தை முத்துசாமியின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக எடுக்க சூரி முடிவு செய்துள்ளார்.

மேலும் இது குறித்து சூரி, இயக்குனர் பாண்டிராஜிடம் சொன்னபோது, அவர் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே கற்றது தமிழ், பேரன்பு, தங்கமீன்கள் உள்ளிட்ட திரைப்படத்தை இயற்றிய இயக்குனர் ராம், சம்மந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு சூரி தன் சொந்த செலவில் தனது தந்தையின் பயோபிக்கை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சூரி இத்திரைப்படத்தில் தனது அப்பா கதாபாத்திரத்தில் அவரே ஏற்று நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இருப்பினும், வேறொரு நடிகர்கள் தேர்வும் நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். விஷ்ணு விஷாலின் தந்தையிடம் சூரி பணத்தை கொடுத்து ஏமாந்தது பெரிய பூதாகரமாக வெடித்தது. தற்போது விஷ்ணு விஷாலுக்கு போட்டியாக சூரியும் தயாரிப்பில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.

Trending News