ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பார்த்திபன் காலைத் தொட்டு கும்பிட்ட பிரபலம்.. என்ன மனுஷன்யா இவரு

வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களின் கவனம் பெற்றவர் பார்த்திபன். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ளார். கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படத்தில் இவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார்.

ஒத்த செருப்பு படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் பார்த்திபன் இருந்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து தற்போது வித்தியாசமானவர் முயற்சியால் ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை எடுத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கேஎஸ் ரவிக்குமார், பார்த்திபன் சார் எதை செய்தாலும் வித்யாசமாக செய்யக்கூடியவர்.

சினிமாவில் பணத்தைப் போட்டுயிருக்கிறார், உழைப்பை போட்டிருக்கிறார், கிரியேட்டிவிட்டியை போட்டிருக்கிறார் ஆனால் அதையெல்லாம் விட மைக்கை போட்டவுடன் தான் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார் என காமெடியாக கே எஸ் ரவிக்குமார் பேசினார்.

மேலும், கேஎஸ் ரவிக்குமார் ஏற்கனவே இரவின் நிழல் படத்தை பார்த்தவிட்டாராம். அதில் ஒரு காட்சியில் மட்டும் கட் செய்தது போன்று தெரிந்துள்ளது. அதைக் கேட்டவுடன் பார்த்திபன் இரவின் நிழல் படத்தின் மேக்கிங் வீடியோவை காண்பித்துள்ளார்.

அதைப் பார்த்த கேஎஸ் ரவிக்குமார் பிரம்மித்து பார்த்திபன் காலில் விழுந்தாராம். மேலும் தன்னுடைய தெனாலி படத்தில் ஒரு காட்சியை ஒரே ஷாட்டில் எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறினார். ஆனால் ஒரு படத்தையே சிங்கிள் சாட்டில் பார்த்திபன் எடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம் என கே எஸ் ரவிகுமார் கூறியிருந்தார்.

Trending News