வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வருங்கால மனைவியே அறிமுகம் செய்துவைத்த ரோகித்.. பாரதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் ஆரம்பத்தில் பயங்கர வில்லியாக இருந்த பெண்பாவை இப்போது காமெடிப் பீஸாக மாற்றியுள்ளனர். அதாவது பல வருடங்களாக பாரதியை காதலித்து வரும் வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருக்கிறார்.

ஆனால் தற்போது வெண்பாவின் அம்மாவாக என்ட்ரி கொடுத்திருக்கும் ரேகா அவருக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை வேலைக்காரன் தொடர் கதாநாயகன் வேலன் தான். இத்தொடரில் ரோஹித் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வெண்பாவின் கடந்த காலம் பற்றி எல்லாமே தெரிந்த ரோகித் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் ரோகித் மீது செம கடுப்பில் உள்ளார் வெண்பா. இந்நிலையில் வெண்பா மற்றும் ரோஹித் இருவரும் காரில் ஒன்றாக செல்கின்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் ஒரு ஆக்சிடென்டால் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். அதைப்பார்த்த ரோகித் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அது பாரதி வேலைப்பார்க்கும் மருத்துவமனை தான். முதலில் ரோகித் மற்றும் வெண்பாவை கண்ணம்மா பார்த்து வாழ்த்து கூறுகிறார்.

அதன்பிறகு பாரதியை அழைத்து வருகிறேன் என கண்ணம்மா செல்கிறார். ரோட்டில் அடிபட்டவரை ஒரு ஜோடி மருத்துவமனைக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள், வந்த பாருங்கள் நீங்கள் அவர்களை பாராட்ட வேண்டும் என பாரதியை கண்ணம்மா அழைத்து வருகிறார்.

அப்போது ரோகித் இவர் தான் என்னுடைய வருங்கால மனைவி என வெண்பாவை பாரதியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இதைக் கேட்ட பாரதி அப்படியே அதிர்ச்சியடைந்து நிற்கிறார். உடனே கடுப்பான வெண்பா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

Trending News