ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சென்டிமென்டாக மகாபலிபுரம் திருமணத்தை நடத்திய விக்னேஷ் சிவன்.. செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நயன், விக்கி

இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தை இயக்கும்போது அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மீது காதல் வயப்பட்டுயுள்ளார். மேலும் இவர்கள் தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மகாபலிபுரத்தில் மிகப் பெரிய ஹோட்டலில் பிரம்மாண்டமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

திரைத்துறையைச் சார்ந்த முக்கியமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்துள்ளனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

செய்தியாளர்கள் அனைவரும் இந்த புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதலில் பேசிய நயன்தாரா இதுவரை கொடுத்த சப்போர்ட்டுக்கு மிக்க நன்றி, இன்னும் நீங்கள் எங்களுக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும் என கூறினார். இந்நிலையில் இவர்கள் திருமணம் முதலில் திருப்பதியில் நடப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் சென்டிமென்டாக தான் மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் விக்னேஷ் சிவன் திருமணத்தை வைத்ததாக கூறியுள்ளார். அதாவது நானும்தான் ரவுடி படத்தின் கதையை சொல்ல முதலில் நயன்தாராவை இந்த ஹோட்டலில் தான் விக்னேஷ் சிவன் சந்தித்துள்ளார்.

அதாவது முதல் சந்திப்பு நடந்த இடத்திலேயே தங்களது திருமணமும் நடக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் விரும்பியுள்ளார். இதனால் தான் அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடந்துள்ளது. மேலும் நயன் சென்டிமென்டில் திருமணம் தேதி 9ஆம் தேதியை வைக்கப்பட்டிருந்தது.

Trending News