சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

திருமணத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்.. மிரண்டு போன நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா சில நாட்களுக்கு முன்பு தன் நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி கோவில், செய்தியாளர்கள் சந்திப்பு என்று பிஸியாக இருக்கும் நயன்தாரா அடுத்ததாக நடிப்பிலும் கவனம் செலுத்த இருக்கிறார். தற்போது நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது.

அதில் அவர் ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமாகும் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு பிறகு நயன்தாரா அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த கையோடு பல கண்டிஷன்களை போட்டு வருகிறாராம். பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அதற்குப் பிறகு அவர்கள் ரொமான்ஸ், கிளாமர் போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள்.

மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்த நடிப்பார்கள். முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவை இதற்கு உதாரணமாக கூறலாம். நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா அதற்குப் பிறகு சோலோ ஹீரோயின் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த பாலிசியை தான் விக்னேஷ் சிவன், நயன்தாராவையும் பின்பற்ற சொல்கிறாராம். இனி ஹீரோக்களுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு அவர் நயன்தாராவிடம் கூறியிருக்கிறாராம். இப்பொழுதுதான் பாலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்குள் இப்படி எல்லாம் கண்டிஷன் போட்டால் வாய்ப்பு கிடைக்காது என்ற கவலையில் தற்போது நயன்தாரா இருக்கிறாராம்.

Trending News