ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஓசியிலேயே அலப்பறை செய்த அட்லி.. நயன்தாரா கல்யாணத்தில் காட்டிய பவுஸ்

நயன்தாராவின் திருமணத்திற்கு கடன் வாங்கிய காரில் வந்து இறங்கிய இயக்குனர் அட்லீயின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

இதனிடையே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு 200 க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு , பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தனர்.இந்நிலையில், இயக்குனர் அட்லி, ஷாருக்கான், ரஜினிகாந்த், சரத்குமார், விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதனிடையே அட்லீ, நயன்தாராவின் திருமணத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து ஜம்முனு இறங்கி உள்ளார். இதைப்பார்த்த அனைவரும் தற்போது ஷாருக்கானுடன் ஹிந்தியில் ஜவான் படத்தில் இயக்கி வருவதால், அதிக சம்பளம் பெற்று ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கும் அளவிற்கு அட்லீ தகுதி உயர்ந்து இருக்கிறது என பலரும் பேசினார் .

ஆனால் பல்லாவரத்தில் உள்ள ஒரு தொழிலதிபரின் காரை கடன் வாங்கி நயன்தாராவின் திருமணத்திற்கு அட்லீ வருகை தந்துள்ளார். இப்படி கடன் வாங்கி ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து பந்தா காட்டித்தான் நயன்தாரா திருமணத்திற்கு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என அட்லீயை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் ராஜாராணி, பிகில் உள்ளிட்ட அட்லீ இயக்கிய திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில், அக்கா,தம்பி என்ற உறவில் இருவரும் இருந்து வருவதால் தனது அக்கா திருமணத்திற்கு தம்பி கெத்தாக செல்ல வேண்டுமென இப்படி கடன் வாங்கிய காரில் சென்றுள்ளார்.

இது எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அண்ணண், அண்ணண் என்று உயிரையே விடக்கூடிய அளவுக்கு தளபதி விஜயின் ரசிகனாக உள்ள அட்லீ, அவரிடமே உள்ள ரோல்ஸ்ராய்ஸ் காரை கடனாக வாங்கி வந்து அட்லீ , நயன்தாராவின் திருமணத்திற்கு வந்திருக்கலாம். அனால் யாரோ ஒரு பெயர் தெரியாத தொழிலதிபரின் காரை கடனுக்கு வாங்கி அட்லீ திருமணத்திற்கு வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News