சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அவ அவன் ஆயிரம் கல்யாணம் பண்றான்.. ஒரே ஒரு கல்யாணத்த பண்ணிட்டு நயன்தாரா படும்பாடு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமண பாதுகாப்பிற்காக மும்பையிலிருந்து 60க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த கையோடு ஒவ்வொரு சர்ச்சையாக வெடித்தது வருகிறது. அதாவது திருமணம் முடிந்த மறுநாள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர்.

அப்போது கோயிலுக்குள் நயன்தாரா காலணி அணிந்து சென்றிருந்ததால் திருப்பதி தேவஸ்தானம் இவர்களுக்கு கண்டனம் தெரிவித்தது. அதன்பிறகு விக்னேஷ் சிவன் தெரியாமல் கோயிலுக்குள் காலனி அடைந்துவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டிருந்தார். அதேபோல் கோயிலுக்குள் நயன்தாராவின் கையை ஒருவர் இழுக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது மனித உரிமை மீறல் ஆணையத்தில் சரவணன் என்பவர் புகார் தொடுத்துள்ளார். அதாவது இவர்களது திருமணம் நடந்த மகாபலிபுரம் ரிசார்ட்டின் பின்புறம் கடற்கரை அமைந்துள்ளது.

ஜூன் 9ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றதால் அந்த ரிசாட்டை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் இருந்தனர். இதனால் கடற்கரையில் அன்று பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரை என்பது ஒரு பொதுவான இடம்.

தனது தனிப்பட்ட காரணத்திற்காக பொதுமக்களை கடற்கரைக்கு அனுமதிக்காதது மனித உரிமை மீறல் செயலாகும் என சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவ அவன் ஆயிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கான், ஆனால் நயன்தாரா ஒரே ஒரு கல்யாணம் பண்ணதுக்கு இவ்வளவு பிரச்சனையா என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Trending News