வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

எப்படியாவது வளர்த்துவிட வேண்டும்.. 2 வாரிசுகளுக்காகவும் இயக்குனர் பாக்யராஜ் போடும் ஸ்கெட்ச்

இயக்குனர் பாக்கியராஜ் திரைப்படங்களை இயக்கும் போது நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதியின் மகள் சரண்யா பாக்யராஜ் 2006 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பிரித்விராஜ், சீதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்த பாரிஜாதம் திரைப்படத்தை பாக்யராஜ் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் சரியாக ஓடாத நிலையில் பட வாய்ப்புகளும் சரண்யா பாக்யராஜிற்கு வரவில்லை.

இந்நிலையில் சில வருடங்கள் வெளிநாட்டிற்கு சென்று படித்து வந்த சரண்யா, ஆஸ்திரேலியாவில் தன்னுடன் படித்த இந்திய நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து பதிவு திருமணமும் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, காதலில் தோல்வியுற்ற நிலையில், சரண்யா பாக்யராஜ் பலமுறை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.

இதனிடையே 37 வயதாகும் தனது மகள் சரண்யாவை திருமணம் செய்து வைப்பதற்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவரை நிச்சயம் செய்ய உள்ளதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். மேலும் சரண்யா பாக்யராஜை கூடிய விரைவில் தன் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்க வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது பல நடிகைகள் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து வரும் நிலையில், 15 வருடங்களுக்கு பிறகு சரண்யா பாக்யராஜ் நடிக்க வருவது அவரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. முதல் திரைப்படமே தோல்வியடைந்த நிலையில் ,அவரது செகண்ட் இன்னிங்ஸ் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் இவரது தம்பியும்,நடிகருமான சாந்தனு சக்கரக்கட்டி, சித்து ப்ளஸ் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தோல்வியுற்ற நிலையில், சமீபத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது பல திரைப்படங்களில் நடித்து கம்பேக்கொடுத்து வருகிறார்.

Trending News