தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகைக்கு தற்போது ஏராளமான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. வாரிசு நடிகரை திருமணம் செய்துகொண்ட பிறகு சிறிதளவு அடக்கி வாசித்த நடிகை தற்போது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் நடிகை முன்னணி நடிகர் ஒருவருடன் போட்ட குத்தாட்டம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. நடிகையிடம் இருந்து இப்படி ஒரு கவர்ச்சியை எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்தப் பாட்டை கொண்டாடி வந்தனர். மொழி தெரியாதவர்கள் கூட குத்தாட்டம் போட வைத்தது அந்த பாட்டு.
அதுமட்டுமல்லாமல் அந்த ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதற்கே பல கோடிகளை சுருட்டி கொண்டு சென்றார் அந்த நடிகை. அதன்பிறகு நடிகைக்கு சரசரவென வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இப்போது நடிகை பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா இடங்களிலும் பிரபலமாக தொடங்கியிருக்கிறார்.
தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை விரைவில் ஹாலிவுட்டுக்கு பொட்டியை கட்ட இருக்கிறாராம். ஏற்கனவே அம்மணி ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். தற்போது மேலும் சில வாய்ப்புகளும் அவரைத் தேடி வருகிறதாம்.
இதனால் குஷியான நடிகை தென்னிந்திய சினிமாவிற்கே டாட்டா காட்டி விட்டு சென்றாலும் சென்றுவிடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம். திருமணம், விவாகரத்து என்று பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்தாலும் நடிகைக்கு படவாய்ப்புகள் மட்டும் மளமளவென குவிந்து வருகிறது. இதைபார்த்து இப்போது போட்டி நடிகைகள் பலரும் வயிற்றெரிச்சலில் இருக்கின்றனர்.