சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கேஜிஎஃப் படத்தில் நடிக்கத் துடிக்கும் பாலிவுட் நடிகைகள்.. 3-ம் பாகத்திற்கு ரெடியான ஸ்கிரிப்ட்!

கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரகாஷ் நீல் இயக்கத்தில்  நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 1 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகே கேஜிஎஃப் 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் உலகளவில் 1250 கோடி வசூலை ஈட்டி பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

கேஜிஎஃப் 2  படத்தின் இரண்டாம் பாகத்தில் யாஷ் உடன் கதாநாயகியாக ஸ்ரீநிதி ரெட்டியும் இவர்களுடன் அச்யுத் குமார், மாளவிகா அவினாஷ், சரண் சக்தி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ராவ் ரமேஷ், அனந்த் நாக், ராமச்சந்திர ராஜு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார்கள்.

தற்போது கேஜிஎஃப் மூன்றாம் பாகத்திற்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட பாலிவுட் நடிகைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு தூது விட்டு வருகின்றனர். இந்தப் படத்தை குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

மேலும் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை போலவே மூன்றாம் பாகத்திலும் பெரிய அளவில் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கேஜிஎஃப் மூன்றாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் நிலையில்தான் உள்ளது. அதனால் இப்படத்தில் நடிப்பதற்காக நட்சத்திரங்கள் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் பெரிய பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள் எல்லாம் கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகத்தில் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. கேஜிஎஃப் படத்தில் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்றதால் மூன்றாம் பாகமும் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இதனால் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினரும் பார்த்து பார்த்து கேஜிஎஃப் படத்தின் மூன்றாவது பாகத்தின் கதை மற்றும் நடிகர் நடிகைகள் இப்படத்தின் ஸ்கிரிப்ட் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது. மேலும் மூன்றாம் பாகத்தின் கதாநாயகன் யாஷ் உடன் பாலிவுட் நடிகைகள் இணைய இருப்பதால் அவர் குஷியாகி இருக்கிறார்.

Trending News