தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.
இப்படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி சென்டிமென்ட் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வரும் விஜய் தற்போது வித்தியாச முயற்சியாக சென்டிமென்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.
அதாவது நேற்று விஜய் கெத்தாக அமர்ந்திருக்கும் போட்டோவுடன் வாரிசு என்ற டைட்டில் வெளியானது. இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளான இன்று ஜூன் 22ஆம் தேதி வாரிசு படத்தில் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் குழந்தைகளுடன் ஆகாயத்தைப் பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் வாரிசு படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதைக் குறிப்பிடும் வகையில் போஸ்டரில் கரும்பு, காய்கறி என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் விஜய்யின் தோற்றமும் பலரையும் கவர்ந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர். இந்நிலையில் தளபதி 67 படத்திற்கான அப்டேட்டும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.