சமீபத்தில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது. அதாவது தலைவரின் புகைப்படம் இல்லாமல் ரத்தக்கறையுடன் ஒரு அருவாள் மட்டும் இருந்தது.
மேலும் அந்த போஸ்டரின் பேக்ரவுண்டு கூகுள் போட்டோஸ் இல் இருந்து சுடப்பட்டது என கேலிகளுக்கு உள்ளானது. ஒரு போட்டோ ஷூட் கூட எடுக்காமல் சூப்பர் ஸ்டார் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது என ரசிகர்கள் வேதனையை தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு தளபதி 66 படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது.
அதில் விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருப்பது போன்று வாரிசு என்ற டைட்டிலுடன் வெளியானது. ஆனால் இந்த போஸ்டர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே துல்கர் சல்மான் Otto விளம்பரத்திற்கு எடுத்த புகைப்படத்தை வாரிசு படக்குழு காப்பி அடித்ததாக இணையத்தில் தகவல் வெளியானது
இதுகுறித்து Otto நிறுவனம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற எந்த போட்டோ சூட்டும் எடுக்கவில்லை. மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான் விஜய்யின் போட்டோவை அகற்றிவிட்டு அதில் துல்கர் சல்மானின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என Otto நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாரிசு படக்குழுவுக்கு இந்நிறுவனம் வாழ்த்துக்களையும் தெரிவித்துயுள்ளது. ஒருவழியாக வாரிசு படக்குழுவையும், தளபதியையும் Otto நிறுவனம் காப்பாற்றியுள்ளது. ஒரு படத்தை இயக்க படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த மெனக்கெட ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.
ஆனால் சில மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இதுபோன்ற செய்து படத்தின் ரிலீசுக்க முன்பே படத்தின் மீது அதிருப்தியை வரச் செய்கிறார்கள். மேலும் தற்போது இந்த Otto நிறுவனத்தின் அறிக்கையால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.