சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

நட்பை விட்டுக்கொடுக்காமல் வெற்றி பெற்ற 7 படங்கள்.. 14 வருடங்களாக அசைக்க முடியாத சுப்ரமணியபுரம்

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது சினிமாபேட்டை வலைதளம் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். இந்த பதிவில் நண்பர்களையும், நட்பையும் பிரதானமாக வைத்து வெளிவந்த தமிழ் படங்களை தற்போது காணலாம்.

சத்யா: கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் சத்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். கதைப்படி வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்தபோது, அரசியல் கட்சிகள் எப்படி இளைஞர்களை பயன்படுத்திக்கொள்கிறது என்று காட்டி இருந்தனர். வித்தியாசமான வில்லனாக ராஜேஷ், கிட்டி நடித்திருந்தார்கள். அவருக்கு உடந்தையாக ஜனகராஜ் வேறு. நல்ல வெற்றியை இந்த படம் பதிவு செய்தது. இந்த படத்தில் கமலுக்கு நண்பர்களாக ஆனந்த், சுந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.

கண்ணெதிரே தோன்றினாள்: பிரஷாந்த், கரண், சிம்ரன் நடித்த இந்த படத்தில், முதலிருவரும் நண்பர்களாய் நடித்திருப்பார்கள். கரணின் தங்கையான சிம்ரனை காதலித்துவிட்டு கரணுடன் நட்பாக பழக முடியாமல் கஷ்டப்படுவார் பிரஷாந்த். மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அந்த நேரத்தில் பெரிய ஹிட்.

பிரெண்ட்ஸ்: விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா மூவரும் நல்ல நண்பர்களாக நடித்திருந்த படம் பிரெண்ட்ஸ். இந்த மாதிரி ஒரு நட்பு வேண்டும் என்று பலரும் ஏங்கும் அளவுக்கு இந்த படம் அமைந்தது. இந்த படத்துக்கு இசை இளையராஜா. பாடல்கள் எல்லாம் ஹிட். மலையாள படத்தின் ரீமேக்கான இதை பாசில் இயக்கி இருந்தார். இந்த படம் மாபெரும் ஹிட். மேலும் தளபதி அவர்களின் வெற்றி வரிசையில் முக்கிய பங்கு வகிக்கும் படம்.

காதல் தேசம்: நட்பு பற்றி பேச ஆரமித்தால் ‘முஸ்தபா.. முஸ்தபா…’ பாடலை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அப்படி வாழ்க்கையில் ஒன்றாக கலந்த பாடல் இது. இந்த படத்தில் அப்பாஸ், வினித் இருவரும் உயிர் நண்பர்களாக வருவார்கள். ஆனால் இருவரும் தபுவை காதலிக்க அவர்கள் இருவரும் பிரிகிறார்கள். மீதமுள்ள கதை எதிர்பாராத வகையி இருக்கும். இசைப்புயல் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்தார். பாடல்கள் எல்லாம் அதிரிபுதிரி ஹிட்.

குசேலன்: பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மீனா ஜோடியாகவும், ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். கதைப்படி தனது பால்ய நண்பனும் இன்றைய சூப்பர்ஸ்டாரும் ஆன ரஜினிகாந்தை எப்படி சந்திப்பது என்ற தயக்கத்தில் இருக்கும் பசுபதியின் வாழ்க்கையை காட்டிய திரைப்படம். இந்த படத்தின் இறுதி காட்சியில் ரஜினி அவர்கள் தனது பால்ய நட்பை பற்றி கூறும்போது நமக்கும் அந்த நாள் ஞாபகங்கள் வந்துவிடும். நிச்சயம் பார்க்கவேண்டிய படம். இந்த படமும் மலையாள ரீமேக் என்பது குறிப்பிட தக்கது.

சுப்ரமணியபுரம்: ‘சேர்க்கைக்காக செஞ்சோம்ங்க…’ என்று மதுரைக்காரர்கள் கூறுவது வழக்கம். அந்த அளவுக்கு நட்புக்கு மரியாதை கொடுப்பார்கள். அதனை வைத்து எடுத்த திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் சசிகுமார், ஜெய் நண்பர்களாக நடித்திருந்தார்கள். இந்த படத்தின் இரண்டாம்பாதி யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு இருந்தது என்பது உண்மை. படத்திற்கு இசை சம்ஸ் வசந்தன். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

என்றென்றும் புன்னகை: இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம் மூவரும் நெருங்கிய நண்பர்களாக நகைச்சுவையில் கலக்கிய திரைப்படம் என்றென்றும் புன்னகை. படத்தின் முதல் பாதி முழுக்க இந்த நண்பர்கள் செய்யும் சேட்டைகள் தான் படம். சந்தானம் அவர்களை கலாய்ப்பதும், அந்த போலீஸ் ஸ்டேஷன் காமெடி என்று நிச்சயம் நமது வயிற்றை பதம் பார்க்காமல் விடாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த இந்த படத்தை நிச்சயம் ஒரு முறை ரசித்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News