திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கவலையில் இருக்கும் ராஷ்மிகா.. புஷ்பா 2 புஸ்ஸுன்னு போச்சு

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.  தற்போது புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இப்படத்திற்கான இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் படம் முழுக்க வெளிநாட்டில் ஷூட்டிங் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் படத்தின் கதையில் வெளிநாட்டு கதாநாயகி நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ராஷ்மிகா மந்தனாவிற்கு பெரிய அளவில் படத்தில் காட்சிகள் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சமந்தா ஆடியது பாடலைப் போலவே புஷ்பாவின் இரண்டாம் பாகத்திலும் பாலிவுட் கதாநாயகி நடனம் ஆட வைக்க திட்டமிட்டுள்ளனர். புஷ்பா படம் வெற்றியான போது ராஷ்மிகா மந்தனா மிகவும் சந்தோஷத்தில் இருந்தார், ஆனால் தற்போது படக்குழு ஒரு சில மாற்றங்கள் செய்து வருவதால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் குறைந்து விடும் என கூறி வருகிறார்.

புஷ்பா திரைப்படம் வெளியானபோது ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பினாலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி வெறும் இரண்டே நாட்களில் உலக அளவில் 100 கோடி வசூலை பாக்ஸ் ஆபீஸில் வாரி குவித்தது.

இத்தகைய வசூல் வேட்டையாடிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் கவர்ச்சியாக ஆடியதும், அல்லு அர்ஜுனின் லோக்கலாக நடிப்பும் முதல் பாகத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகாவிற்கு ஓரளவு காட்சிகள் மட்டுமே இருக்குமாம்.

இருப்பினும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்திற்குப் பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தளபதியின் 66-வது படமான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் ராஷ்மிகா மந்தனா தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளார்.

- Advertisement -

Trending News