செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கோபியை போட்டுக்கொடுத்த முதல் புருஷன்.. எழில் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. மேலும் தற்போது இத்தொடர் விருவிருப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது, கோபியை விட்டு மொத்தமாக பிரிய ராதிகா முடிவு செய்து மும்பை செல்ல இருக்கிறார்.

ஆனால் ராதிகாவின் வாழ்க்கையை நினைத்து பாக்கியா மிகுந்த கவலையில் உள்ளார். இந்நிலையில் தற்போது ராதிகா மும்பை செல்லயுள்ளார் என்ற விஷயத்தை பாக்கியா தனது குடும்பத்திடம் சொல்கிறார். இதைக் கேட்ட கோபி ராதிகாவை பற்றி பாக்கியாவிடம் விசாரிக்கிறார்.

தற்போது அதிரடி திருப்பம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது எழிலுக்கு இதுவரை தனது அப்பா ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார் என்பது மட்டுமே தெரியும். அது யார் என்பது தற்போது வரை தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது ராதிகாவின் கணவர் ராஜேஷ் எழில் இடம் சந்தித்த பேசுகிறார்.

அப்போது ராதிகாவுடன் தான் கோபி பழகி வருகிறார் என்ற உண்மையை ராஜேஷ் கூறுகிறார். பின்பு ராதிகாவுடன் கோபி பேசும் வீடியோ ஆதாரத்தையும் காட்டுகிறார். இதைப் பார்த்த எழில் அதிர்ச்சி அடைகிறார். அதன்பின்பு தனது அப்பா இப்போது மாறிவிட்டார் என ராஜேஷிடம் கூறுகிறார்.

ஆனால் ராஜேஷ், கோபி உங்க அம்மாவை விவாகரத்து செய்துவிட்ட ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என கூறுகிறார். இதனால் தற்போது பாக்கியலட்சுமி தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் எழில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஒருவேளை எழில் நேராக ராதிகாவிடம் போய் பேசலாம் என்று போனால் இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது தற்போது பாக்கியா வாழ்க்கையில் வரக்கூடாது என ராதிகா வெளிநாடு செல்ல உள்ளார். ஆனால் எழில் ஏதாவது தவறாக பேசினால் ராதிகா வில்லியாக மாற வாய்ப்புள்ளது.

Trending News