வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

IPS சந்தியாவுடன் பொட்டியை கட்டிய சரவணன்.. இந்த ட்விஸ்ட்டை எதிர் பாக்கல இல்ல

விஜய் டிவியில் ராஜா ராணி2 சீரியலில் இறந்துபோன அப்பா அம்மாவின் ஐபிஎஸ் கனவை எப்படியாவது கணவனின் துணையுடன் நிறைவேற்ற வேண்டும் என சந்தியா தன்னுடைய மாமியாருக்கு தெரியாமல் அதற்கான பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தாள். ஆனால் எதிர்பாராதவிதமாக சிவகாமிக்கு சந்தியா போலீஸ் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்துவிடுகிறது.

அதன்பிறகு கோபத்துடன் வீட்டிற்கு வரும் சிவகாமியின் காலை பிடித்து சந்தியா மற்றும் சரவணன் இருவரும்  மன்னிப்பு கேட்கின்றனர். இருப்பினும் சமாதானம் ஆகாத சிவகாமி, சரவணன் மற்றும் சந்தியா இருவரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்க்கிறார். ஒருகட்டத்தில் சரவணன் சந்தியாவின் கனவை நிறைவேற்றுவதற்காக வீட்டைவிட்டு தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற முடிவை எடுக்கிறான்.

அவனுடைய இந்த முடிவுக்கு சிவகாமி தான் முக்கிய காரணமாக இருக்கிறார். ஏனென்றால் அவர் அந்த அளவிற்கு சந்தியா சரவணன் இருவரையும் வெளுத்து வாங்குகிறார். வீட்டில் இருக்கும் சரவணனின் அப்பா, அண்ணன், தம்பி ஆகியோர் சரவணனை சமாதனபடுத்தினாலும் அவன் எடுத்த முடிவில் அவன் உறுதியாக இருக்கிறான்.

பிறகு தன்னுடைய மனைவி சந்தியாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு பொட்டியை கட்டிக்கொண்டு வெளியேறுகிறான். கெஞ்சி புலம்பினாலும் யாருடைய பேச்சையும் சரவணன் கேட்கவில்லை. மேலும் சந்தியாவிற்கும் இந்த வீட்டை விட்டு வெளியேறுவதற்கு துளிகூட விருப்பம் இல்லாததால் சரவணனிடம் வீட்டிலேயே இருக்கலாம் என சமாதானப் படுத்துகிறாள்.

இருப்பினும் சந்தியாவின் படிப்பிற்காகவும் அவளுடைய கனவிற்காகவும் தன்னுடைய அம்மாவை தூக்கி எறிந்து விடுகிறான். இவ்வாறு ராஜா ராணி2 சீரியலில் ஏற்பட்டிருக்கும் இந்த ட்விஸ்ட்டை யாரும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. சரவணன் வீட்டை விட்டு வெளியே சென்றதும் சிவகாமிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு எப்படியாவது மறுபடியும் வீட்டிற்கு சந்தியா சரவணன் இருவரும் வர தான் போகின்றனர். இதை எத்தனை சீரியலில் நாம் பார்த்திருக்கிறோம்.

இதன் பிறகு சிவகாமி கொஞ்சம் கொஞ்சமாக, சந்தியாவின் கனவை புரிந்து கொண்டு சரவணன்-சந்தியா போக்கிலேயே விட்டு விடுவார். ஐபிஎஸ் பரிட்சையில் பாஸ் ஆன சந்தியா, சிவகாமியின் ஆசையான பேர பிள்ளையை பெற்று கொடுத்துவிட்டுத்தான் ட்ரெய்னிங் கிளம்புவாள். இதெல்லாம் இனி வரும் நாட்களில் ராஜா ராணி2 சீரியல் என்ன நடக்கப்போகிறது.

Trending News