வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் அதிகம் யாரும் தொடாத திருட்டை மையமாக வைத்து வெளிவந்த படங்களின் வரிசையை பார்க்கலாம்.
திருடா திருடா: அனேகமாக தமிழ் சினிமாவில் முதல் முறையாக நவீன திருட்டை மையமாக வைத்து வெளிவந்த முதல் திரைப்படமாக இந்த படம் இருக்கலாம். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா, எஸ் பி பாலசுப்ரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர். கதைப்படி சின்ன சின்ன திருட்டு செய்யும் இருவர் ஒரு மாபெரும் திருட்டை துப்பறிய உதவினால் எப்படி இருக்கும் என்பது போன்ற கதை அமைப்பு கொண்டது. இந்தப் படத்திற்கு இசை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
நாணயம்: பிரசன்னா ஹீரோவாக நடித்த வில்லனாக சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்த திரைப்படம் நாணயம். இந்தப்படத்தில் வங்கிக் கொள்கையை அழகாக காண்பித்து இருந்தனர். ஹாலிவுட்படங்களை பார்த்து தமிழில் படம் எடுக்கும் சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு இசை ஜேம்ஸ் வசந்தன். ஓரளவு வணிக ரீதியாக இந்த படம் வெற்றி பெற்றது.
ராஜதந்திரம்: வீரா, தர்புகா சிவா உட்பட பலர் நடித்திருந்த திரைப்படம் ராஜதந்திரம். நேர்த்தியான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் பிரதான கதை நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிப்பது பற்றி. சீட்டின் நுனிவரைக் கொண்டு வரும் அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை அமைக்கப் பட்டிருந்தது. சரியான நேரத்தில் வெளியாகாத காரணத்தால் இந்த திரைப்படம் பெரிய அளவு மக்களின் கவனத்தை ஈர்க்காமல் போனது என்பது வருத்தமான செய்தி. இந்தப் படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் அதனுடைய தற்போதைய நிலை என்னவென்று சரியாக தெரியவில்லை.
மங்காத்தா: தல அஜித் குமார் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாபெரும் ஹிட்டான திரைப்படம் மங்காத்தா. கரப்ட் போலீஸ் அஜித் குமாரும் மேலும் நான்கு நண்பர்களும் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் போட்டிகள் மூலம் வரும் பெட்டிங் பணத்தை எப்படி ஸ்கெட்ச் போட்டு கொள்ளை அடிக்கிறார்கள் என்பது தான் கதை. படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் சுவாரசியமான பைக் மற்றும் கார் சேஸிங் இருந்த காரணத்தால் படம் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் அர்ஜுன். யுவன் சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.
சூது கவ்வும்: நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி பாபிசிம்ஹா சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் நடித்திருந்த திரைப்படம் சூது கவ்வும். டார்க் ஹ்யூமர் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. சொந்த வீட்டிலேயே பணம் திருடும் கதாபாத்திரத்தில் கருணாகரன் சிறப்பாக நடித்திருந்தார். அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் என்றால் அது இந்த படம்தான்.
சதுரங்க வேட்டை: எச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான சதுரங்க வேட்டை படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் கதாநாயகன் எப்படி வேறு வகையில் மக்களை ஏமாற்றுகிறார் என்பதை அழகாக சொல்லி இருந்தார் இயக்குனர். மண்ணுளிப் பாம்பு, மல்டி லெவல் மார்க்கெட்டிங், ரைஸ் புல்லிங் என்று நாம் செய்தித்தாள்களில் படித்த அனைத்து ஏமாற்று வேலைகளையும் சிறப்பாக படம்பிடித்து நமக்கு கொடுத்திருந்தனர். இந்த படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது என்பது கூடுதல் தகவல்.
ஜென்டில்மேன்: ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ஜென்டில்மேன். இந்த படத்தில் அர்ஜுன் மதுபாலா கவுண்டமணி செந்தில் சரன் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். பகலில் அப்பளம் விற்பவராக பகுதி நேரங்களில் திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார் அர்ஜுன். இதற்கு என்ன காரணம் என்பதை சுவாரசியமான இரண்டாவது பகுதியில் நேர்த்தியான திரைக்கதை மூலம் கதை சொல்லி இருந்தார் இயக்குனர். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை கே.டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.
8 தோட்டாக்கள்: வங்கிக் கொள்ளை, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைப் பிரித்துக் கொள்வதும் என்ற முதன்மையான கதையை கொண்டு ஆங்கிலத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் அது போன்று எடுக்கப்பட்ட புதிய முயற்சி 8தோட்டக்கள். ஒரு போலீஸ்காரர் 8 தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கி களவு போய் திருடன் கையில் கிடைத்தால் என்ன ஆகும் என்ற கேள்வி இந்த திரைப்படத்தின் கதையாகும். அந்தத் துப்பாக்கியில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு கொண்டிருக்கும் யார் பலியாகிறார்கள் என்பதை இந்த படம் விவரிக்கிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய புதிய முயற்சி. எம்எஸ். பாஸ்கர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.