ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இணையத்தில் கசிந்த சூர்யா 41 படத்தின் டைட்டில்.. உச்சகட்ட கடுப்பில் பாலா

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 41-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்காக முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க இருக்கிறது. இன்னிலையில் சூர்யா 41 படத்தின் டைட்டில் தற்போது இணையத்தில் கசிந்ததால் படத்தின் இயக்குனர் பாலா உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘வணங்கான்’ என்கின்ற டைட்டிலை வைப்பதற்கு இயக்குனர் பாலா உறுதி செய்திருக்கிறார். அத்துடன் ‘கடலாடி’ என்கின்ற மற்றொரு டைட்டிலும் சிபாரிசில் இருக்கிறதாம். மேலும் சூர்யா இந்த படத்தில் படகோட்டியாக நடித்திருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகின.

ஏற்கனவே இந்தப் படம் மீனவர் பிரச்சினை குறித்து அலசும் படமாக இருக்கும் என்றும், சூர்யா இந்தப் படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் ஒரு கேரக்டர் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துவரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கூடிய விரைவில் சூர்யா 41 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் பிறந்த நாளான வரும் ஜூலை 22 ஆம் தேதி சூர்யா 41 படத்திற்கான டைட்டில் வெளியாகும் என ரசிகர்கள் கணிக்கின்றனர்.

மேலும் அன்றைய தினத்திலேயே சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் புகைப்படங்களும் வெளியாக இருக்கிறது. அத்துடன் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா அடுத்து உருவாக இருக்கும் விக்ரம் 2 படத்தில் இருக்கிறாரா என்று அப்டேட்டும் வெளியாகவுள்ளது. ஆகையால் பாலா இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் சூர்யா படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ‘வணங்கான்’, ‘கடலாடி’ என்ற இந்த இரண்டு வித்தியாசமான டைட்டிலில் எது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News