சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மீனா. மேலும் தற்போது வரை மீனா படங்களில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது இவரும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அட்லியின் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார் என்ற செய்தி வெளியாகி திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதாவது இரண்டு நுரையீரல்களையும் மாற்றவேண்டும் அளவுக்கு பாதிப்பு இருந்துள்ளது.

பெங்களூரில் இவர்களது வீட்டிற்கு பக்கத்தில் புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அந்த புறாக்களின் எச்சம் கலந்த காற்றினை சுவாசிப்பதால் வித்யாசாகருக்கு அலர்ஜி ஏற்பட்ட சுவாசப் பிரச்சனை வந்தது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மேலும் உடல் நிலை மோசமாகி உள்ளது.

இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இவர்கள் காத்திருந்தனர். ஆனால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்துதான் நுரையீரல் பெறமுடியும்.

இதனால் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வித்யாசாகருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. இதனால் நுரையீரல் பிரச்சனை தீவிரமாகி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

- Advertisement -

Trending News