தன்னுடைய நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை தொடர்ந்த ஒரே நடிகருடன் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை காட்டிலும் நிறம் கம்மியாக இருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தற்போது அந்த நடிகை தொடர்ந்து ஐந்தாறு படங்கள் ஒரே நடிகருக்கு ஜோடியாக நடித்துவிட்டார். இதனால் தற்போது அந்த நடிகருடன் இவரை சேர்த்து கிசுகிசுக்கள் வெளியாகிறது. மாஸ் நடிகராக உள்ள அந்த நடிகரின் படத்தில் நடிக்க நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் பெரிதும் இந்த நடிகைக்கு தற்போது யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் அந்த மாஸ் நடிகர் மட்டும் தொடர்ந்து இந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து வருவதால் இவ்வாறு இணையத்தில் கிசுகிசுக்கள் பரவி தொடங்கி உள்ளது.
இதனால் தற்போது அந்த நடிகை கோபத்தில் கொந்தளித்து உள்ளார். சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்த படத்தில் அந்த நடிகர், நடிகை இருவரும் நடித்து இருந்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை. கடைசியில் இவர்கள் இருவரும் சந்திக்கும் காட்சி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இந்தப்படம் கிட்டத்தட்ட எட்டாவது முறையாக இருவரும் இணைந்து நடித்த படம். முதல் படத்தில் நடித்த நடிகர், நடிகை அடுத்த படத்தில் அதே கூட்டணி இணைந்தாலே சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும்.
ஆனால் இவர்கள் இருவரும் எட்டு படங்களில் இணைந்து நடித்ததால் இவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் இணையத்தில் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது அந்த நடிகை மாஸ் நடிகருடன் எவ்வளவு பெரிய வாய்ப்பு வந்தாலும் இனிமேல் அவருடன் நடக்கக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளாராம்.