திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

புற்றுநோய் அறிகுறி.. மூர்த்தியை தொடர்ந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன மருமகள்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் தங்களுடைய மனைவிகளுடன் கூட்டுக்குடும்பமாக இணைந்து இருப்பதை அழகாக காண்பிப்பதால் இந்த சீரியல் டிஆர்பி மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் தனத்தின் பிறந்தநாள் அன்று, ஏற்பட்ட சண்டை சச்சரவால் கதிர் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவின் மனைவி மீனா அவ்வபோது வில்லியாகவும் ஆகவும், அவ்வபோது காமெடி பீஸ் ஆகவும் காட்டப்படுகிறார். அவர் அடிக்கும் வாய்க்கு இதெல்லாம் வேண்டும் என சின்னத்திரை ரசிகர்கள் கமெண்ட் அடிக்கும் வகையில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா இக்கட்டான சூழ்நிலையை சந்தித்திருக்கிறார்.

அதாவது ஹேமாவிற்கு மார்பகத்தில் நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி ஏற்பட்டு அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளார். இந்தக் கட்டி மார்பக புற்று நோய்க்கு உரிய அறிகுறிக்கான கட்டியாகும். இதை விரைவில் அகற்றவில்லை என்றால் நாளடைவில் பெரிதாகி பெரிய பிரச்சினையே வந்திருக்கும்.

சுதாரிப்பாக ஹேமா, மருத்துவரை அணுகி அந்த புற்றுநோய் கட்டியை நீக்கியுள்ளார். அத்துடன் சோஷியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் ஹேமா, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருப்பது போன்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பது போன்றும் புகைப்படங்களை வெளியிட்டார்.

அதன் பிறகு தான் எதற்காக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறேன் என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், ‘பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று மார்பக புற்று நோய்க்குரிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். இதன்பிறகு நலமுடன் இருக்கும் ஹேமா, தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Trending News