விஜய்யை வைத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்திற்கு வாரிசு என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் தெலுங்கு சினிமா உலகில் கொடிகட்டி பறக்கும் ஒரு தயாரிப்பாளர். தெலுங்கு சினிமாவான தில், ஆர்யா ,பத்ரா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
மேலும் தில் ராஜு தயாரிப்பில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த முன்னா திரைப்படத்தின் மூலம் தான் வம்சி முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது தமிழில் விஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் விஜய்க்கு ஒரு ஃபேமிலி சென்டிமென்டாக படமாக எடுக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏகப்பட்ட நடிகர் பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு விஜய்க்கு சம்பளம் 120 கோடியாம். விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜு படத்திற்கு வாரிசு பெயர் வச்ச ராசியால் அவருக்கு வாரிசு வந்திருக்கிறது.
தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் முதல் மனைவி ஹன்ஷிதாவுக்கு ஏற்கனவே 5 வயது மகனும், இரண்டு வயது மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் 51 வயதான தில் ராஜுவின் இரண்டாவது மனைவி வைகா ரெட்டிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
விஜயின் 66-வது படத்திற்கு எந்த நேரத்தில் வாரிசு என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு இப்பொழுது ஆண் குழந்தை பிறந்து அவர்களது குடும்பத்திற்கு வாரிசு கிடைத்திருக்கிறது.
மருத்துவமனையில் தில் ராஜு தனது ஆண் குழந்தையை கையில் ஏந்தி அந்த குழந்தையுடன் பேசியபடி மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் தளபதியின் வாரிசு படத்தின் மகிமைதான் என கிண்டல் அடிக்கின்றனர்.