சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அடுத்த 500 கோடி வசூலுக்கு தயாராகும் லோகேஷ்.. தளபதி 67யில் இணையும் மாஸ் கூட்டணி

தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் ராஸ்மிகா மந்தனா குஷ்பு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கயுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் வேற லெவல் ஹிட்டானது. இதுதவிர லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படமும் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது.

இதனால் இந்த இரு பிரபலங்களும் மீண்டும் ஒரே படத்தில் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் மாஸ்டர் படம் 50% லோகேஷ் படமாகவும் 50% விஜய் படம் ஆகவும் இருந்தது. ஆனால் தளபதி 67 படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக எடுக்கப்படயுள்ளது.

இந்நிலையில் லோகேஷன் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரத்னகுமார் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். ரத்னகுமார் இதற்கு முன்னதாக ஆடை மற்றும் மேயாதமான் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி 67 இப்படத்திற்கான முதற்கட்ட பணியில் லோகேஷ் மற்றும் ரத்னகுமார் இறங்கியுள்ளனர்.

மேலும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது. இந்நிலையில் லோகேஷ் மற்றும் ரத்னகுமார் கூட்டணியில் மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 67 படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறயுள்ளனர்.

மேலும் லோகேஷன் விக்ரம் படம் தற்போது வரை கிட்டத்தட்ட 400 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வரும் நிலையில் தற்போது இதே கூட்டணியை தனது அடுத்த படத்திலும் இணைந்து 500 கோடி வசூலித்து திட்டம் போட்டுள்ளார் லோகேஷ்.

- Advertisement -

Trending News