சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சத்தம் இல்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த டாக்டர் பாரதி.. பொண்ணு யாரு தெரியுமா?

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. பல வருடங்களாக இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்போது இந்த சீரியலை சிலர் கழுவி ஊற்றினாலும் இல்லத்தரசிகளிடம் நல்ல ஆதரவு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் கண்ணம்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலகினார். தற்போது அவருக்கு பதில் வினுசா தேவி நடித்து கொண்டிருக்கிறார். இதில் கண்ணம்மாவுக்கு கணவராக பாரதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத்.

இவருக்கு சின்னத்திரையில் ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருண் பிரசாத் சீரியல் நடிகை ஒருவரை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இவருக்கும், ராஜா ராணி சீரியலில் வில்லியாக கலக்கும் அர்ச்சனாவுக்கும் காதல் என்று ஒரு செய்தி பரவி வந்தது.

அதற்கு ஏற்றார் போல் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் சில வீடியோக்களும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த ஜோடி யாருக்கும் தெரியாமல் தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை மிகவும் ரகசியமாக நடத்தி முடித்துள்ளனர்.

அந்த நிச்சயதார்த்த நிகழ்வில் மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர்களின் நிச்சயதார்த்தம் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் பாரதி கண்ணம்மா வில்லியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ராஜா ராணி வில்லியை செலக்ட் செய்து விட்டீர்களா என்றும் ஜாலியாக கேலி செய்து வருகின்றனர்.

Trending News