ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விக்னேஷ் சிவனை மூச்சு முட்ட கட்டிப்பிடித்த நயன்தாரா.. புகைப்படத்தை பார்த்து பொறாமைப்படும் ரசிகர்கள்

தற்போது புதுமண ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

மேலும் நயன்தாரா திருமண கோலத்தில் எப்படி இருப்பார் என நயன்தாராவின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சிகப்பு நிற புடவையில் அழகாக காட்சியளித்தார். அதுமட்டுமல்லாமல் நயன்தாரா திருமண கோலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் பல பெண்கள் உடை அலங்காரம் செய்து போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் வந்தனர். இதைத்தொடர்ந்து நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று வந்தனர். இதை தொடர்ந்து சில சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தனர்.

மேலும் சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஹனிமூன் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியது. அடுத்தடுத்து ரொமான்டிக் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து இருந்தனர்.

அதன் பிறகு நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் ஷூட்டிங்காக மும்பை சென்றுயிருந்தார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் விக்னேஷ் சிவனும் தனது அடுத்தப்பட வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார்.

Nayanthara-Vignesh Shivan

இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை மூச்சுவிட முடியாத அளவுக்கு கட்டிப்பிடித்து உள்ள புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹனிமூன் சென்றுவந்த பிறகு இந்த வீகெண்ட்டை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் தற்போது பொறாமையில் உள்ளனர்.

- Advertisement -

Trending News