வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு பெரும் நடிகைகள்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்

சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அவருக்கு பெரும்பாலான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஒரு நிலை இப்போது இருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகைகள் அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து வரும் வாய்ப்பு தேவை இல்லை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆனால் சில நடிகைகள் தங்களுக்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று அதற்கு சம்மதித்து விடுகின்றனர். மேலும் பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது நடிகைகள் பலரும் இந்தப் பிரச்சினையை பற்றி தைரியமாக பொதுவெளியில் பேசி வருகின்றனர். இருப்பினும் சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு இந்த பிரச்சனைகள் மட்டும் குறையவே இல்லை. அந்த வகையில் தற்போது பிஆர்ஓ வித்தகன் வெளிப்படையாக நடிகைகளுக்கு நடக்கும் விஷயங்களைப் பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, இப்போது பல பிரபலங்களும் யூடியூப் சேனல்கள் மூலம் தங்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக கூறி வருகின்றனர். மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுப்பதால் தங்களுக்கு நிராகரிக்கப்பட்ட பட வாய்ப்புகள் பற்றியும் அவர்கள் தைரியமாக கூறுகின்றனர்.

இதே போன்று தான் ஒருமுறை பிரபல இயக்குனர் ஒருவரிடம் பட வாய்ப்புக்காக ஒரு நடிகையை அழைத்துச் சென்றேன். அவர் அந்த நடிகையை நடித்துக் காட்டும் படி கூறினார். அந்த நடிகையும் அற்புதமாக நடித்துக் காட்டினார். இருப்பினும் அந்த இயக்குனர் அவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார்.

அதற்கு அந்த நடிகை மறுத்ததால் வேறு ஒரு நடிகையை அந்த இயக்குனர் படத்தில் புக் செய்தார். ஏனென்றால் அந்த நடிகைக்கு நடிக்கத் தெரியாவிட்டாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஒப்புக்கொண்டதால் அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த விஷயம் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் தெரியும்.

அவரிடம் இது பற்றி நான் கூறிய போது அந்த தயாரிப்பாளர் விடுங்கள் வேறு நடிகையை நடிக்க வைத்து விடலாம் என்று கூறினார். இது போன்று பட வாய்ப்புகளுக்காக சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் என்று பிஆர்ஓ வித்தகன் ஒரு அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

Trending News