சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

தமிழ் சினிமாவுக்கு அஸ்திவாரமாக இருந்த 7 குடும்பங்கள்.. சிவாஜி குடும்பத்திற்கு வந்த கடும் சவால்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவின் கலைக்குடும்பங்களை பார்க்கலாம். இந்த குடும்பத்தில் இருந்து பலர் சினிமாவில் நடிகராகவோ, வேறு துறையிலோ இருப்பார்கள். வரிசையை காணலாம் வாங்க!

எம்.ஆர்.ராதா குடும்பம்: இந்த குடும்பம் ரொம்ப பெரிசு. எல்லாரையும் சொல்லிகிட்டே போக முடியாது. அதனால கொஞ்சம் சுருக்கமாக சொல்கிறோம். எம்.ஆர்.ராதா நன்றாக அறியப்பட்ட வில்லன், குணச்சித்திர நடிகர். இவரது மகன் ராதாரவி சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். இவரது மகளான ராதிகா சினிமா, தொலைக்காட்சி இரண்டிலும் பிசியாக இருப்பவர். மேலும் ராதாவின் குடும்பத்தை சேர்ந்த வாசு விக்ரம் நகைச்சுவை நடிகர் என்பதும், இன்னொரு மகளான நிரோஷா கதாநாயகியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜயகுமார் குடும்பம்: நாட்டாமை கதாபாத்திர புகழ் விஜயகுமார் கருப்பு வெள்ளை காலம் தொட்டே நடித்து வருபவர். இவர் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என்று பன்முகம் கொண்ட நடிகர். இவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இவர்களது மகள்களான வனிதா, வினிதா, ஸ்ரீதேவி என மூவரும் கதாநாயகிகளாக நடித்தவர்கள். விஜயகுமாரின் மூத்த தாரத்தின் மகனான அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர்.

பாக்யராஜ் குடும்பம்: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற பெயர் கொண்ட பாக்யராஜ், கதாநாயகன், கதாசிரியர், இயக்குனர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இசை அமைப்பாளர் என்று பல துறை வித்தகர். இவரது மனைவி பூர்ணிமா நன்கு அறியப்பட்ட முன்னாள் கதாநாயகி. இவர்களது வாரிசுகளான சாந்தனு, பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது நாம் அறிவோம். மகள் சரண்யா பாரிஜாதம் படம் மூலம் நாயகியாக அறிமுமானார். நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து வராத காரணத்தால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் குடும்பம்: இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா பிரபல பாடகி என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்த செய்தி. இவர்கள் இருவரும் காதல் திருமணம் புரிந்துகொண்டனர் என்பது கூடுதல் தகவல். இவர்களது மகன் விஜய் இன்று தமிழகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். தளபதி என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர். வசூல் சக்கரவர்தியாகவும் இருக்கிறார் என்பது பிரபலமான செய்தி. விஜயின் சித்தி மகன் விக்ராந்தும் பிரபல நடிகர் என்பது கூடுதல் தகவல்.

டி ராஜேந்தர் குடும்பம்: அஷ்டாவதானி டி ராஜேந்தரை பற்றி தனியாக நாம் கூறத்தேவை இல்லை. நடிப்பு, இசை, பாடகர், பாடலாசிரியர், நடனம், திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்தையும் செய்யக்கூடிய திறமை பெற்றவர். இவரது முதல் மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு என்கிற எஸ்.டி.ஆர் என்கிற சிலம்பரசன் ராஜேந்திரன் தமிழில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர். மற்றொரு மகன் குறளரசன் இசை அமைப்பாளர். ராஜேந்தரின் மனைவி உஷா பிரபல தயாரிப்பாளர், பாடகி என்பதும் பலருக்கு தெரிந்திருக்க கூடும்.

சிவக்குமார் குடும்பம்: பிரபல நடிகர், ஓவியர் சிவக்குமார், திரையுலக மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர். பல திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவரது இரு மகன்களான சூர்யா, கார்த்தி, தமிழ் சினிமாவின் வித்தியாசமான படங்களை கொடுக்கு நடிகர்கள். மேலும் சூர்யா சிறந்த படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். நடிகை ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு அந்த வீட்டின் மருமகளாக சிறப்பாக வாழ்கிறார் என்பது ஊரறிந்த செய்தி.

சிவாஜி கணேசன் குடும்பம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பம் 3 தலைமுறையாக சினிமாவில் இருக்கிறார்கள். நடிப்புக்கே திலகமான கணேசன் அவர்கள், பல திரைப்படங்களில் திறமையாக நடித்தவர். அவரது நடிப்பிற்கு உலகெங்கிலும் பலர் விசிறிகள். இவரது மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இரண்டாவது மகன் பிரபு 90களில் மிகவும் பிரபலமான நாயகன். தற்போது குணச்சித்திர வேடங்கள் செய்து வருகிறார். சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபு தற்போது தமிழில் வித்தியாசமான படங்களை தேடி நடித்து வரும் இளம் ஹீரோ ஆவார்.

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத ஒரு கதாநாயகனாக தற்போது வரை ரசிகர் மனதில் இடம்  பிடித்தவர் சிவாஜி. ஆனாலும் தற்போது அவரது வாரிசுகளான பிரபு மற்றும் விக்ரம் பிரபு சரியான ஒரு இடத்தை பிடிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். அதையும் தாண்டி சிவக்குமாரின் வாரிசான சூர்யா மற்றும் கார்த்திக் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -spot_img

Trending News