சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கேப்டன் மில்லர்.. தனுஷ்க்கு அந்த காலத்து கதை கைகொடுக்குமா?

தனுஷ் சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கயுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கயுள்ளார் என்ற தகவலை இப்படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். இதுவரை தனுஷ் மூன்று வேடங்களில் எந்த படத்திலும் நடித்ததில்லை.

கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படம் சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய காலத்து கதை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது 1930 மற்றும் 1940 காலகட்டத்தில் எடுக்கப்படும் படமாகும். இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகியிருந்தது.

இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தனுஷின் திரை வாழ்க்கையிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் கேப்டன் மில்லர்.

அதாவது இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட உள்ளதாம். ஏனென்றால் சர்வதேச சினிமா ரசிகர்களை கவர வேண்டும் என்பதால் இவ்வாறு மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தை அடுத்த ஆண்டு 2023 இல் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படம் வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஒரு பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. இதில் சுதந்திர போராட்டத்திற்கு முன்பு உள்ள கதை அம்சத்தில் தனுஷ் முதல்முறையாக நடிக்க உள்ளதால் இந்த படம் அவருக்கு கைகொடுக்குமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News