ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்.. காரணம் கேட்டு பரபரப்பில் திரையுலகம்!

தமிழ் திரையுலகில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவரின் உடல்நிலை குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது நடிகர் விக்ரமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அவர் தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த செய்தி தற்போது அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது விக்ரமின் உடல்நிலை குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அதனால் அவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவருடைய ரசிகர்கள் தவித்து வருகின்றனர். தற்போது சோசியல் மீடியாவில் விக்ரம் பூரண நலம் பெற வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் அதிக உழைப்பை கொடுத்து நடித்து வருகிறார். அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் அதற்காக முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்திற்காக தற்போது பலரும் காத்திருக்கும் நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சியான தகவல் பலரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

- Advertisement -

Trending News