பலரும் எதிர்பார்த்து வந்த அந்த திருமணத்தை நம்பர் நடிகை மிகவும் ரகசியமாக பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடத்தி முடித்தார். அனைவரும் பிரம்மித்துப் பார்க்கும் வகையில் அந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஆனாலும் அதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் தவிர மற்ற அனைத்தையும் நம்பர் நடிகை மிகவும் ரகசியமாக பொத்தி பொத்தி வைத்தார். அதற்குப் பின்னால் இருந்த மிகப்பெரிய பிசினஸ் தான் இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது மிகவும் ரகசியமாக வைத்திருந்த பல முக்கிய புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.
திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பிரபலங்களின் போட்டோக்கள் அனைத்தையும் தற்போது நடிகையின் கணவர் வெளியிட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்ததில் சில விஷயங்கள் சிக்கியுள்ளது.
எதையும் பிசினஸ் ஆக பார்க்கும் நம்பர் நடிகை தன்னுடைய திருமணத்தையும் மிகப்பெரிய அளவில் பிசினஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருந்தார். அந்த வகையில் அவர் மிகப்பெரிய நிறுவனத்திற்கு தன் திருமண நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமையை விற்க ஏற்பாடு செய்திருந்தார்.
நடிகையின் பிளானை பார்த்து கோடம்பாக்கமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால் இப்போது நடிகையின் அந்த பிசினஸ் கனவு முற்றிலும் தகர்ந்து விட்டதாம். ஏனென்றால் நடிகை இது குறித்து அந்த நிறுவனத்திடம் மிகப்பெரிய தொகையை டீல் பேசி இருக்கிறார்.
இதனால் அதிர்ந்து போன அந்த நிறுவனம் இவ்வளவு பணத்தை கொடுத்து இதை வாங்க முடியாது என்று தற்போது ஒரேடியாக பின்வாங்கி விட்டதாம். இதனால் ஏமாந்து போன நடிகை இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட முடிவு செய்து இருக்கிறாராம்.
அதனால் தான் நடிகையின் கணவர் தற்போது ஒவ்வொரு போட்டோக்களையும் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இனி நடிகையின் திருமண வீடியோவை பார்க்கும் ஆர்வமும் ரசிகர்களிடம் இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்த விஷயத்தில் நடிகை அதிக ரிஸ்க் எடுக்காமல் அமைதியாக இருக்கிறாராம்.