புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இரவின் நிழல் படத்தில் நி**வாணமாக நடித்துள்ள பிரபல நடிகை.. அதுக்குன்னு இவ்வளவு ஓப்பனாகவா?

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். சிங்கிள் ஷாட்டில் கிட்டத்தட்ட 92 நிமிடங்களுக்கு ஓடும் இந்த படம் பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ சமீபத்தில் நடந்தது. அதை பார்த்த பிரபலங்கள் பலரும் பார்த்திபனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வருகின்றனர். மேலும் படத்தின் மேக்கிங் சம்பந்தப்பட்ட காட்சிகளும் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

தற்போது பார்த்திபன் இந்த படத்தில் நி**வாணமாக நடித்துள்ள நடிகை பிரிகிதா பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த பிரிகிதா வேறு யாரும் அல்ல யூட்யூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவி டீச்சர் தான். மிகவும் அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் பவி டீச்சர் இந்த படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர் இப்போது வெள்ளிதிரையில் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கும் இவருக்கு இந்த இரவின் நிழல் திரைப்படம் நல்ல பெயரை பெற்று கொடுக்கும் என்று அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது பார்த்திபன் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதில் அவர் தற்போது பத்திரிகையாளர்களிடம் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அந்த நிர்வாண காட்சி பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்தாலும் அது யார் கண்ணுக்கும் உறுத்தலாக இருக்காது.

அதுமட்டுமல்லாமல் அந்த காட்சியில் தைரியமாக நடித்துள்ள பிரிகிதாவின் நடிப்பு பலரின் பாராட்டையும் நிச்சயம் பெறும். மேலும் இது போன்ற இன்னும் பல காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கிறது என்று அவர் இந்த படம் குறித்து பேசி இருக்கிறார்.

iravin-nizal
iravin-nizal

தற்போது பார்த்திபன் கூறியிருக்கும் இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆவலை இன்னும் தூண்டியுள்ளது. அந்த வகையில் பார்த்திபன் பப்ளிசிட்டிக்காக இந்த விஷயத்தை தற்போது போட்டு உடைத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News