திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

இரண்டு கணவர்களால் கைவிடப்பட்ட நடிகை.. ஓடி வந்து உதவி செய்த விஷால்

விஷால் இப்போது நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அதனால் இவர் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்கள் உட்பட பலருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மூத்த நடிகை ஒருவருக்கு செய்துள்ள உதவி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருப்பவர் நடிகை சர்மிளா. தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்த இவருக்கு இடையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.

அது மட்டுமல்லாமல் இவர் இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றவர். தற்போது தன் மகனுடன் தனியாக வசித்து வரும் இவர் சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் தனிமையில் வாழ்ந்து வரும் இவருக்கு பாலியல் ரீதியாக சில தொல்லைகள் ஏற்பட்டதையும் இவர் மீடியாவில் வெளிப்படையாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால் இவருக்கு செய்த உதவியை பற்றி இப்போது இவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது இவர் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

அது குறித்து பத்திரிகைகளில் கூட செய்திகள் வெளியானது. இதை பார்த்த விஷால் உடனே இவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்திருக்கிறார். மேலும் இவருடைய பையனுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் அவர்தான் செய்து வருகிறாராம். கடந்த ஆறு வருடங்களாக அவரின் பையனுக்கு விஷால் தான் ஸ்கூல் பீஸ் கட்டுகிறாராம்.

இதைப் பற்றி கூறிய அவர் விஷாலை மிகவும் பெருமையாக பேசியுள்ளார். அதோடு அவர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது விஷால் இவருடைய பையனுக்கு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் கல்விக்கும் உதவி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விஷால் இப்படி பலருக்கும் உதவி செய்வதை யாருக்கும் தெரியாமல் தான் செய்து வருகிறாராம். அந்த வகையில் அவர் இப்படி பல குழந்தைகளுக்கு உதவி செய்வது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் அவர் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படும் பலருக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News