திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பட்ஜெட்டில் பாதியை ஆட்டைய போட்ட நயன்தாரா.. ஓவர் கான்ஃபிடன்ஸ்சில் தயாரிப்பாளர்

ஒரு சிறிய பட்ஜெட் படத்திற்கு ஐந்து கோடிகள் வரை செலவாகும். ஆனால் இப்போதெல்லாம் பெரிய ஹீரோ, ஹீரோயின் சம்பளமே நூறு கோடிகள் என ஆகிவிட்டது. இன்னிலையில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்.

இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போகிறார்.

இந்த படத்தில்தான் நயன்தாரா பாலிவுட்டில் முதல் முதலாக என்ட்ரி கொடுக்கிறார். இதன்பிறகு நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த படம்ந ந-75 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது நயன்தாராவின் 75-வது படம்.

இந்த படம் ஒரு குக்கிங் வேலை செய்யும் ஒருவரை மையப்படுத்தி, அவர் எப்படி முன்னேறி பெரிய ஆளாக வருகிறார் என்பதுதான் கதையாம். இந்தப் படத்தை ஷங்கருக்கு அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்த நிலேஷ் கிருஷ்ணா தான் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 20 கோடி தானாம். ஆனால் அதில் 10 கோடி நயன்தாராவிற்கு சம்பளமாம். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ தயாரிக்கவிருக்கிறது.

படத்திற்கு ஆகும் பட்ஜெட்டில் பாதியை நயன்தாரா சம்பளமாக கேட்டிருப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்த கதை மேல் இருக்கும் கான்ஃபிடன்ஸ்சில் தயாரிப்பாளர் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறார். குறிப்பாக நயன்தாராவிற்கு 10 கோடி சம்பளம் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்.

Trending News