திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

நி**வாணமாக நடித்ததன் காரணத்தை கூறிய பவி டீச்சர்.. சம்மதிக்க வைத்த பார்த்திபன்!

ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரகிதா. இதன்பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க விஜய்யின் மாஸ்டர் படத்தில் பவி டீச்சர் நடித்திருந்தார். தற்போது பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் இவர் நிர்வாணமாக நடித்துள்ளார்.

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய பார்த்திபன் இப்படத்தில் ஒரு நிர்வாண காட்சி இருப்பதாக கூறியிருந்தார். தற்போது இது பற்றி பவி டீச்சர் ஓபனாக பேசியுள்ளார்.

முதலில் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய பவி டீச்சர் சென்றுள்ளார். ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் பார்த்திபன். இப்படத்தில் கிட்டத்தட்ட 19 நொடிகள் பவி டீச்சர் ஆடை இன்றி நடித்துள்ளார். இதுகுறித்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது பேசிய பவி டீச்சர் நான் புடவை அணியும் போதே சரியாக இருக்கிறதா என பலமுறை பார்க்கக்கூடிய சராசரி பெண்தான். ஆனால் இந்த படத்தில் ஆடையின்றி நடிக்க சொன்னபோது எனக்கும் பயமாகத்தான் இருந்தது. அதன் பிறகு அந்த கதாபாத்திரம் எவ்வளவு புனிதமானது என்பதை பார்த்திபன் சார் புரிய வைத்தார்.

ஆனால் என் பெற்றோர்கள் எப்படி இதற்கு சம்மதிப்பார்கள் என்ற கேள்வி என் மனதில் இருந்தது. அதன்பிறகு பார்த்திபன் சார் வந்து என் பெற்றோரிடம் கண்டிப்பாக இந்த காட்சியை யாரும் தவறாக பார்க்க மாட்டார்கள் என சம்மதத்தை வாங்கினார்.

அதன் பிறகு என் பெற்றோர் சம்மதத்துடன் அந்த காட்சியில் நடித்தேன் என பவி டீச்சர் கூறியுள்ளார். மேலும் அந்த காட்சியில் நிச்சயம் கவர்ச்சி இருக்காது, அங்கே புனித மட்டும் இருக்கும் என இரவின் நிழல் படத்தைப் பற்றிய சில விஷயங்களை அந்தப் பேட்டியில் பவி டீச்சர் பகிர்ந்து கொண்டார்.

Trending News