திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

எதுவுமே தெரியாமல் உளறும் ப்ளூ சட்டை மாறன்.. ஆதாரத்தோடு பார்த்திபனிடம் அசிங்கப்பட்ட சம்பவம்

பார்த்திபன் தன்னுடைய இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்தி இருக்கிறார். தற்போது இந்தத் திரைப்படம் ஒரு நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று ஆசியா சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் பார்த்திபனின் இந்த முயற்சி பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த பட குழுவினரையும் ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு தற்போது பல பாசிட்டி விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இதுதான் குறை என்று யாருமே இதுவரை சொல்லவில்லை. அனைவரும் படத்திற்காக உழைத்த நபர்களைப் பற்றியும், இதில் இருக்கும் டெக்னாலஜி பற்றியும் மட்டுமே பேசி வருகின்றனர்.

ஆனால் ஒருவர் மட்டும் இந்த திரைப்படத்தின் சாதனையை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் யார் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அனைவருக்குமே தெரியும் அது ப்ளூ சட்டை மாறனாகத் தான் இருக்கும் என்று. அந்த வகையில் இவர் பார்த்திபனுக்கு எதிரான ஒரு ஆதாரத்துடன் களத்தில் குதித்திருக்கிறார்.

இவர் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இரவின் நிழல் திரைப்படத்திற்கு முன்பே ஒரு திரைப்படம் சிங்கிள் ஷாட்டில் வெளிவந்திருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபிஷ் அண்ட் கேட் என்ற திரைப்படம் தான் அது என்று போட்டோவுடன் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை டிவிட்டர் பக்கத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனென்றால் பார்த்திபனின் இந்த முயற்சியை சில அமைப்புகளே ஏற்றுக்கொண்டு ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் கொடுத்துள்ளது. ஆனால் ப்ளூ சட்டை மாறன் அவர்களுடைய உழைப்பை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இப்படி ஒரு புரளியை கிளப்புவது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் அவர் குறிப்பிட்டிருக்கும் அந்த திரைப்படம் மூன்று நாட்கள் எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டது என்ற ஆதாரத்தை தற்போது ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் ப்ளூ சட்டை மாறனுக்கு தமிழ் சினிமாவின் மீது இருக்கும் வன்மம் அப்பட்டமாக தெரிகிறது.

ஒருவரின் திறமையை பாராட்டாமல் அதில் என்ன குறை இருக்கிறது என்பதை மட்டுமே உற்று நோக்கும் இது போன்ற ஆட்கள் இருக்கும் வரையில் தமிழ் சினிமாவிற்கு முன்னேற்றம் என்பதே கிடையாது. ஒரு தமிழராக பார்த்திபனின் இந்த முயற்சிக்கு நாம் தான் ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு ப்ளூ சட்டை மாறன் இதுபோன்று பேசி வருவது கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது. மேலும் பார்த்திபன் இப்படி ஒரு முயற்சியை செய்யப்போவது பல மாதங்களுக்கு முன்பே அனைவருக்கும் தெரியும். அப்போதே ப்ளூ சட்டை மாறன் இது போன்ற ஆதாரத்தை வெளியிட்டு கூறியிருக்கலாம்.

ஆனால் அப்படி செய்யாமல் படம் வெளியான சமயத்தில் இப்படி கூறுவதிலேயே தெரிகிறது அவருடைய கெட்ட எண்ணம். படத்தின் வசூலையும், படம் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வத்தையும் குறைப்பதற்காகவே ப்ளூ சட்டை மாறன் இதுபோன்று பேசி வருகிறார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாத ரசிகர்கள் பார்த்திபனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

Trending News