1. Home
  2. கோலிவுட்

தயாரிப்பாளர் உதயநிதி மீது பூசப்பட்ட சாயம்.. ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

தயாரிப்பாளர் உதயநிதி மீது பூசப்பட்ட சாயம்.. ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

தமிழ் சினிமா தற்போது இருக்கும் சூழலில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல், திரைப்படத்தை வெளியிடுவதற்கு சிக்கல் என்று காரணம் சொல்லி கொண்டே போகலாம். இதற்கு காரணம் மற்ற மாநில திரைப்படங்கள் அனைத்து மாநிலங்களில் வெற்றி பெற்று வருகின்றன. காரணம் பான் இந்தியா என்ற ஒரு புது வார்த்தை அனைத்து திரைப்படங்களும் அனைத்து திரையரங்குகளிலும் வெளிவருகிறது. ஆகையால் திரையரங்குகள் கிடைப்பதில் மிக சிக்கல்கள் எழுந்துள்ளன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் 2008ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் உதயநிதி ஸ்டாலின் ஆல் நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் இந்த நிறுவனம் பல திரைப்படங்களை கட்டாயப்படுத்தி குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் பார்ப்பதாக பல பிரச்சினைகள் அந்த காலகட்டத்தில் வெளிவந்தன. இதனால் இந்த நிறுவனத்திற்கு நிறைய கெட்ட பெயர்கள் கோலிவுட்டில் பேசப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை வேறு அனைத்து திரைப்படங்களுக்கும் நிறைய திரையரங்குகள் தேவைப்படுவதால் மற்றும் பணப்பெட்டியின் காரணமாகவும் வெளியிட முடியாமல் தவித்து வரும் சூழலில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரைப்படங்களை வாங்கி சிறு கமிஷன் பெற்றுக்கொண்டு தயாரிப்பாளர்கள் கேட்கும் திரையரங்குகளை பெற்றுத் தருகிறார்கள். இதனால் பல திரைப்படங்கள் எளிதாக வெளிவருகின்றன. பல கெட்ட பெயர் வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. பல தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் இந்நிறுவனம் செயல்படுகிறது. இவர்களால் எந்த ஒரு திரைப்படமும் எந்த தடையும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் விரும்பும் வண்ணம் வெளியிடப்படுகின்றன. இதனை திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் அந்நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர். பிஜேபியில் உள்ள ராதாரவி, மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் இன்னும் வேறு கட்சியை சார்ந்தவர்களும், தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான தயாரிப்பாளர்களும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.