வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பவி டீச்சர் பேச்சால் கொந்தளித்த மீடியா.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இரவின் நிழல் திரைப்படம் தற்போது பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது நான் லீனியர் திரைப்படமாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பார்த்திபனுக்கு ஏராளமான வாழ்த்துக்களும், பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிலக்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ப்ரிகிடா தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அதாவது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் இடம்பெறுவது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ப்ரிகிடா இந்தப் படம் ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த கெட்ட பக்கங்களை மட்டுமே காட்டுகிறது.

அதில் சேரி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை காண்பிக்கும் போது அதிக கெட்ட வார்த்தைகள் இடம்பெறத்தான் செய்யும். ஏனென்றால் இப்போது நாம் சேரியில் சென்று பார்த்தால் அங்கு இருக்கும் மக்கள் அப்படித்தான் பேசுவார்கள். அதை ஒரு திரைப்படம் எடுக்கிறோம் என்ற காரணத்திற்காக நாம் மாற்ற முடியாது. அந்த மக்கள் என்ன பாஷை பேசுகிறார்களோ அதைத்தான் காட்ட முடியும் என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஒரு குறிப்பிட்ட மக்களை பற்றி அவர் கூறியிருக்கும் இந்த கருத்து பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்க்க ப்ரிகிடா தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில் அவர் நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று அப்படி கூறவில்லை. நான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இடம் மாறும்போது மொழியும் மாறும் என்பதை மட்டும் தான் நான் தெரிவித்தேன். இது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பி வருவதை பார்த்த பார்த்திபன் ப்ரிகிடா சார்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது 1989ல் நடக்கும் கதை என்பதால் அப்படி காட்டப்பட்டுள்ளது. இப்போது 2022 ல் சேரி மக்களிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் என் கதையை பொருத்தவரை அவர்களை ஹீரோவாக ஆக்குவது தான் என்னுடைய நோக்கம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Trending News