ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நான் கேஜிஎப்- ஐ எல்லாம் ஓரங்கட்டிடுவேன்.. ஒரு வருடமாக பா ரஞ்சித் செய்த செயல்

சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் பா ரஞ்சித். இந்தப் படத்தை அடுத்து அவர் தற்போது சீயான் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். முதல்முறையாக இவர்கள் கூட்டணி அமைத்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. அப்போது பேசிய ரஞ்சித் இந்த படம் 19ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. மேலும் இப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல உண்மை சம்பவங்கள் இருக்கிறது என்று கூறினார்.

ஏற்கனவே பா. ரஞ்சித் இந்த படத்தை கே ஜி எஃப் திரைப்படம் அளவுக்கு எடுக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்தது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக வேறு சில தகவல்களும் கிடைத்துள்ளது. அதாவது பா ரஞ்சித் மற்றும் அவருடைய அசிஸ்டன்ட் அனைவரும் கடந்த ஒரு வருடமாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்களாம்.

கேஜிஎஃப் என்பது கோலார் தங்க சுரங்கத்தை குறிப்பதாகும். அந்த வகையில் இவர்கள் அனைவரும் பல மாதங்களாக அங்கு தங்கி இருந்து பல உண்மை நிலவரங்களை சேகரித்து வந்துள்ளார்கள். இதன் மூலம் மக்களுக்கு தெரியாத பல உண்மைகளை இந்த படத்தில் அவர்கள் சொல்ல இருக்கிறார்கள்.

ஏற்கனவே நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்தார் கேஜிஎஃப் திரைப்படத்தில் பல விஷயங்கள் காட்டப்பட்டிருந்தாலும் அதில் சொல்லப்படாத சில உண்மைகளையும் பா ரஞ்சித் தெளிவாக காட்டப் போகிறாராம். இதன் மூலம் அவர் ஏற்கனவே வெளிவந்திருந்த கேஜிஎஃப் பாகங்களை எல்லாம் ஓரம் கட்டி விடுவதாக மார்தட்டி கொண்டு இருக்கிறார்.

தற்போது இந்த தகவல் படத்தின் மீதான ஆவலை தூண்டி இருக்கிறது. மேலும் பா ரஞ்சித் அப்படி என்ன விஷயங்களை சொல்லப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே ரசிகர்களை பரப்பரப்பில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Trending News