விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் கதிர் மற்றும் முல்லை இருவரும் தனிக்குடித்தனம் சென்று உள்ளதால் தற்போது கதிர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். ஆனால் தனது மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் வேறு வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் கதிர் வேலை பார்க்கும் ஹோட்டலில் மளிகை சாமான் சப்ளை செய்வதற்காக வந்த ஜீவா கதிரை பார்த்து அதிர்ந்து போனார். அப்போது ஜீவா கதிரை வீட்டுக்கு கூப்பிடும் கதிர் வர மறுத்துவிட்டார். தற்போது கடைசி தம்பி கண்ணனுக்கு வேளை வாங்குவதற்காக குடும்பத்திடம் இருந்து 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.
தனமும் பணத்தை ஏற்பாடு செய்துவிடலாம் என கூறுகிறார். ஆனால் மீனா தற்போது நாம் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற செலவு சரியா என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதன்பின்பு மீனாவை ஜீவா சமாதானப்படுத்துகிறார். மறுநாள் ஜீவாவும் மீனாவும் கோயிலுக்குச் செல்லும்போது கதிர் வீட்டுக்குச் செல்கின்றனர்.
அப்போது முல்லை எவ்வளவு வற்புறுத்தியும் மீனா வீட்டுக்கு உள்ளே வர மறுத்துவிடுகிறார். அதன்பின்பு வழக்கம்போல கதிர் வேலை பார்ப்பதற்காக ஹோட்டல் செல்கிறார். அங்கு முல்லையின் அப்பா, அம்மா இருவரும் சாப்பிடுவதற்காக வருகின்றனர்.
முதலில் யார் என்று தெரியாமலேயே அவர்களுக்கு கதிர் சாப்பாடு பரிமாறுகிறார். அதன் பின்பு எதார்த்தமாக முல்லையின் அப்பா கதிரை பார்த்துவிடுகிறார். உடனே கதிரும் அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதனால் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் வர காத்திருக்கிறது.
அதாவது முல்லையின் அப்பா இந்த கடையில் வேலை செய்யவேண்டாம் என்று சொன்னாலும் கதிர் அவரை சமாதானப்படுத்தி விடுவார். ஆனால் முல்லையின் அம்மா இதற்கு சம்மதிக்காமல் இந்த விஷயத்தை பூதாகரமாக மாற்றிவிடுவார். மேலும் முல்லைக்கு கதிர் ஹோட்டலில்தான் வேலை பார்க்கிறார் என்பது தெரிந்தால் பல ட்விஸ்ட் வர வாய்ப்புள்ளது.